WHITE LOTUS அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட வெண்தாமரை !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Monday, 19 July 2021

WHITE LOTUS அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட வெண்தாமரை !!

அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட வெண்தாமரை !!

White Lotus
தாமரை குளத்து நீர் இரத்தக் கொதிப்பை தணிக்கும். கண் எரிச்சலை போக்கும். கண் எரிச்சலுடையவர்கள் காலை மாலை தாமரைக் குளத்து நீரை பருகி வரலாம்.

தாமரையின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து பனை வெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். பித்தத்தைக் குறைக்கும்.
 
நீர்ச்சுருக்கு, நீர்த்தாரை எரிச்சல் போன்றவற்றைப் போக்கும். சுரக் காய்ச்சலுக்கும் இதனைக் கொடுத்து வந்தால் காய்ச்சல் படிப்படியாகக் குறையும்.
 
ஞாபக சக்தியைத் தூண்டும். மூளைக்கும், நரம்புகளுக்கும் புத்துணர்வூட்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். சரும எரிச்சலைப் போக்கும்.
 
இதயத்தைப் பாதுகாக்கும். இதய தசைகளை வலுப்படுத்தும். இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புச்சத்தைக் குறைக்கும்.
 
தாமரைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால், இருமல், அதிக உதிரப் போக்கு  போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கும்.
 
வெண்தாமரைப் பூ மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. நரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது என சித்தர்கள் பலர் கூறியுள்ளனர்.
 
தாமரைப் பூவின் மகரந்தப் பொடியுடன் தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவுபெறும். காது கேளாமை நீங்கும். ஆண்மைத் தன்மை  அதிகரிக்கும்.

No comments:

Post a Comment