almond-resin-is-the-solution-to-the-problems-caused-by-body-heat உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பாதாம் பிசின் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Monday, 16 August 2021

almond-resin-is-the-solution-to-the-problems-caused-by-body-heat உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பாதாம் பிசின் !!

Almond Resin

உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பாதாம் பிசின் !!


சிலருக்கு உடல் சூடு அதிகமாகி விடுவதால் உடல்நல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பாதாம் பிசினை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து அது கோந்து போன்று ஆன பிறகு சாப்பிட உடல் சூடு தணியும்.

கோடைகாலங்களில் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு சிலருக்கு நீர் சுருக்கு ஏற்படுகிறது. மேலும் சிறுநீரக பைகளில் அடைப்பு ஏற்பட்டு சிறுநீர் சரியாக கழிக்க முடியாத நிலையும் உண்டாகிறது. ஊற வைத்த பாதாம் பிசினை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும். கோடைகாலங்களில் ஏற்படும் நீர்வறட்சி மற்றும் நீர் சுருக்கு போன்றவை நீங்கும்.

பாதாம் பிசினை ஊற வைத்து, சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்றவை நீங்கும். பாதாம் பிசினுக்கு அதிகளவு இருக்கும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும், குறைவான எடை கொண்டவர்கள் எடை கூடவும் செய்யும் ஒரு சிறப்பு ஆற்றல் இருக்கிறது. 
 
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் பாதாம் பிசினை கலந்து ஒரு நாளைக்கு ஒருமுறை அருந்த வேண்டும். உடல் எடை கூட விரும்புவார்கள் கொழுப்பு நிறைந்த பாலில் பாதாம் பிசினை கலந்து சாப்பிட வேண்டும்.
 
நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டு உடல் நலம் தேறி வரும் நபர்கள் மற்றும் தற்போதும் நோயால் அவதிப்பட்டு வரும் நபர்கள் பாதாம் பிசினை நீரில் ஊற வைத்து வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் நோயால் உடல் இழந்த பலத்தை மீண்டும் உடலுக்கு தரும். நீண்டகால நோயை போக்குவதற்குண்டான நோயெதிர்ப்பு சக்தியையும் பெருக்கும்.
 
வெப்பம் அதிகம் நிறைந்த இடங்களில் பணிபுரிவதாலும், இறுக்கமான கால்சட்டைகள்(பாண்ட்) அணிவதாலும் உஷ்ணம் அதிகமாகி இன்று ஆண்கள் பலருக்கும் அவர்களின் விந்து நீர்த்து போய் விடுகிறது. தினமும் இரவு இளம் சூடான பசும்பாலில் பாதாம் பிசினை கலந்து பருகி வந்தால் உடலின் உஷ்ணம் தணிந்து, நரம்புகள் வலுப்பெற்று விந்து கெட்டிப்படும். மலட்டுத்தன்மை இருந்தாலும் அது நீங்கும்.
 
உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று வெள்ளைப்படுதல். இந்த பிரச்சனை குணமாக மூன்று நாட்கள் தினமும் காலை, மாலை, இரவு என மூன்று வேலையும் ஊறவைத்த பாதாம் பிசினை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து அப்படியே சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குணமாகும்.


No comments:

Post a Comment