aloe-vera-medicine-methods-and-benefits சோற்று கற்றாழை வைத்திய முறைகளும் பயன்களும் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday, 26 August 2021

aloe-vera-medicine-methods-and-benefits சோற்று கற்றாழை வைத்திய முறைகளும் பயன்களும் !!

allow vera


சோற்று கற்றாழை வைத்திய முறைகளும் பயன்களும் !!


இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.

கற்றாழையை அடிக்கடி சாப்பிட்ட ு வருபவர்களுக்கு உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளில் தேங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல்நலத்தை  மேம்படுத்துகிறது.
 
சோற்றுக்கற்றாழையை வெட்டி பச்சை நிறத்தோலை நீக்கிவிட்டு, 7 முதல் 8 முறை தண்ணீர்விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து, அடுப்பில் ஏற்றி 1 கிலோ  கற்றாழைக்கு 1 கிலோ கருப்பட்டியைத் தட்டிப்போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கருப்பட்டி தூள் கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும் அதனுடன் கால் கிலோ தோல் உரிக்கப்பட்ட பூண்டினை போட்டு மீண்டும் கிளற வேண்டும்.

பூண்டு வெந்த பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிட்டு தயிர்கடையும் மத்தினால் கடைய  வேண்டும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 
 
காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவிற்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிகள், நீர் எரிச்சல், மாதவிடாய்க் கோளாறுகள், பெண்மலடு ஆகியவை உடனே சரியாகும். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல்  வலுவாகும்.
 
ஆரோக்கியமான செல்களை உடலில் வளர்ச்சி பெற செய்யும் ஆற்றல் கற்றாழைக்கு உண்டு. எனவே புற்று நோய் ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்களும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கற்றாழையை மருத்துவ உணவாக பயன்படுத்துவது நல்லது.
 
கற்றாழை தண்டுகளை தோல் நீக்கி, சதை பகுதியை மிக்சியில் போட்டு நன்கு அடித்து கற்றாழை ஜுஸ் தயாரித்து, அதில் சிறிதளவு நாட்டு சர்க்கரை கலந்து  சாப்பிடுவதால் உடல் வெப்பம் தணியும். சிலருக்கு கோடைகாலங்களில் ஏற்படும் நீர்சுருக்கு அல்லது மூத்திரசுருக்கு போன்ற பிரச்சனைகளும் நீங்கும். உடலுக்கு  புத்துணர்ச்சியை அளிக்கும்.


No comments:

Post a Comment