amazing-beauty-tips-to-get-rid-of-dry-skin-problems வறண்ட சரும பிரச்சனையை போக்கும் அற்புத அழகு குறிப்புகள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 22 August 2021

amazing-beauty-tips-to-get-rid-of-dry-skin-problems வறண்ட சரும பிரச்சனையை போக்கும் அற்புத அழகு குறிப்புகள் !!

Dry Skin

வறண்ட சரும பிரச்சனையை போக்கும் அற்புத அழகு குறிப்புகள் !!


சூட்டைத் தணிக்க வெள்ளரிதான் பெஸ்ட். சூட்டையே தணிக்கும் வெள்ளரி, வறண்ட சருமத்திற்குப் பொலிவு தரும்.


வெள்ளரியைத் துண்டு துண்டாக நறுக்கி  முகத்தில் தடவி உலர வைக்கலாம். 20 முதல் 30 நிமிடங்களில் சருமத்தைப் பளபளப்பாக்கி விடும்.





 
தக்காளி மற்றும் வெள்ளரி இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்தலாம். எப்படி என்றால் சாறாகப் பிழிந்து..! இவை இரண்டையும் நன்றாக அரைத்து சாறாக்கி  முகத்தில் தடவி, 30 நிமிடங்கள் உலர வைக்க வேண்டும். அதன் பிறகு கழுவினால் வறண்ட சருமம் சரியாகியிருக்கும்.
 
முல்தானி மட்டி பொடியைப் பன்னீருடன் கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் உலர வைத்து பின்னர் கழுவினால், சரும வறட்சி நீங்கும். இதனைத் தினசரி  செய்யலாம். தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இதை முயலலாம்.
 
மஞ்சள் தேய்த்துக் குளிப்பது ஒருபுறம், தூய மஞ்சளை நன்கு அரைத்து, அதில் நீர் சேர்த்து பசை போல் ஆக்கி, முகத்தில் தடவி, அது உலர்ந்த பிறகு நன்கு கழுவ  வேண்டும்.
 
வெண்ணெய்யை அப்படியே முகத்தில் தடவி சிறிது நேரம் உலர வைத்து, பின்பு நீரில் கழுவினால், வறண்ட சருமம் நீங்கும்.
 
அரிசி மாவுடன், வெள்ளரிச் சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கி, முகத்தில் தடவி, சிறிது நேரம் உலர வைத்து பின்பு கழுவினால், வறண்ட சருமத்திலிருந்து  விடுதலை கிடைக்கும்.

No comments:

Post a Comment