amazing-benefits-of-drumstick-spinach-soup- முருங்கைக் கீரை சூப்-ன் அற்புத பயன்கள் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 29 August 2021

amazing-benefits-of-drumstick-spinach-soup- முருங்கைக் கீரை சூப்-ன் அற்புத பயன்கள்

Mudakathan Keerai Soup






முருங்கைக் கீரை சூப்-ன் அற்புத பயன்கள்


முருங்கைக் கீரையில் ஊட்டச்சத்துக்கள் அதிகளவு உள்ளது. மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், உடலினுள் இருக்கும் உட்காயங்கள், அலர்ஜியைக் குறைக்க உதவும். இது குடலை சுத்தம் செய்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை பெறச்செய்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது.



தேவையான பொருட்கள்:

முருங்கைக் கீரை - 4 கப்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
சின்ன வெங்காயம் - 4 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
தண்ணீர் - 6 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகு - தேவையான அளவு
எண்ணெய்/நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும். பின்னர் அதில் பூண்டு, இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் சின்ன வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும். பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும். அடுத்து அதில்
முருங்கைக்கீரை சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி, பின் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் வேக வைத்து, மிளகு மற்றும் உப்பு சேர்த்து கிளறி
இறக்கினால், முருங்கைக்கீரை சூப் தயார்.


No comments:

Post a Comment