amazing-tips-to-prevent-hair-loss-and-get-rid-of-dandruff- தலைமுடி உதிர்வு தடுப்பதோடு பொடுகு தொல்லையை போக்கும் அற்புத குறிப்புகள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday 10 August 2021

amazing-tips-to-prevent-hair-loss-and-get-rid-of-dandruff- தலைமுடி உதிர்வு தடுப்பதோடு பொடுகு தொல்லையை போக்கும் அற்புத குறிப்புகள் !!

 

தலைமுடி உதிர்வு தடுப்பதோடு பொடுகு தொல்லையை போக்கும் அற்புத குறிப்புகள் !!


நெல்லிக்காயை நிழலில் காயவைத்து அதனை தேங்காய் எண்ணெய் உடன் சேர்த்து காய்ச்சி நன்றாக ஆறவைத்து தினமும் தலை முடியில் தேய்த்து வந்தால் முடி உதிர்வதை தடுத்து, உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர செய்யும். 

தேங்காய் தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவது தலைமுடியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். தேங்காயை நன்கு அரைத்து, தலையில் தேய்த்துக்கொள்ள வேண்டும். அரை மணி நேரத்திற்கு பிறகு தலைமுடியை நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வந்தால் தலைமுடி உதிர்வது நிற்கும். எலுமிச்சையை தயிருடன் கலந்து தலையில் நன்றாக தடவி, 30 நிமிடங்கள் ஊற வைத்த பின்பு சீயக்காய் தேய்த்து தலை குளித்தால் பொடுகு தொல்லை நீங்குவதோடு தலை முடி உதிர்வும் நிற்கும்.
 
இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் அதற்கு சமமாக ஆலிவ் ஆயிலை எடுத்துக்கொண்டு அதனுடன் இலவங்கப்பட்டை பொடியை சேர்த்து பசை போன்று தயாரித்து, அக்கலவையை தொடர்ந்து தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி மிருதுவாவதோடு, முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளரும்.
 
காற்றாழை ஜெல்லை வாரத்திற்கு இரண்டு முறை தலையில் தேய்த்து வந்தால் முடிக்கு மிகவும் நல்லது. கற்றாழையை இரண்டாக வெட்டி தலையில் தேய்த்து சில மணி நேரத்திற்கு பிறகு தலையை தண்ணீரில் கழுவ வேண்டும்.
 
தலைமுடி உதிர்வை தடுக்க ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை நன்கு அரைத்து, அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொண்டு, அந்த கரைசலை தலை முடியில் நன்கு தடவி, முக்கால் மணி நேரம் ஊற வைத்த பின்பு தண்ணீரில் தலைமுடியை அலச வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் தலைமுடி உதிர்வு, பொடுகு போன்றவற்றை தடுக்க முடியும்.

No comments:

Post a Comment