are-there-so-many-benefits-to-lemon-peel எலுமிச்சை தோலில் இத்தனை பயன்கள் உள்ளதா? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 29 August 2021

are-there-so-many-benefits-to-lemon-peel எலுமிச்சை தோலில் இத்தனை பயன்கள் உள்ளதா?

எலுமிச்சைதோலில் இத்தனை பயன்கள் உள்ளதா?

முழு எலுமிச்சையையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அதிகாலையில் டீ, காபிக்கு பதிலாகப் பருகி வருவது நல்ல பலன்களை தரும்.


இந்த பானத்தை தினமும் காலை ஒரு டம்ளர் குடித்து வந்தால், நோய்யெதிர்ப்பு மண்டலம் வலிமையடைகிறது. 
 
* எலுமிச்சை கொதிக்கவைத்த நீர் நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மை காக்கும். தினமும் இந்த நீரை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீங்கள் மிகவும் ஆற்றலுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
 
* செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் சரியாகும் மற்றும் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை சீராக வைத்துக்கொள்ளும்.
 
* சிட்ரிக் பழங்களிலிருந்து வரும் வலுவான நறுமணம் உடல் துர்நாற்றத்தைப் போக்கும், பாக்டீரியாவுக்கு எதிராகப் போராடும். எலுமிச்சைத் தோலின் சாறு, காயங்களைக் குணப்படுத்த உதவும். இது பாக்டீரியா பரவாமல் தடுக்கும். 
 
* தினமும் காலையில் இந்த பானத்தை குடித்து வந்தால், உடலில் உள்ள மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்டும். இந்த பானத்தை  தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்டக்கொழுப்புகள் வெளியேற்றப்படுகிறது,
 
* இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் உடலை சுத்தபடுத்தும். முக்கியமாக உடலில் உள்ள PH அளவை நிலைப்படுத்தும்.


No comments:

Post a Comment