beauty-tips-to-remove-dark-circles-and-glow-on-the-face முகத்தில் உள்ள கருமையை நீக்கி பளபளப்பை தரும் அழகு குறிப்புகள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 22 August 2021

beauty-tips-to-remove-dark-circles-and-glow-on-the-face முகத்தில் உள்ள கருமையை நீக்கி பளபளப்பை தரும் அழகு குறிப்புகள் !!

Almond Oil

முகத்தில் உள்ள கருமையை நீக்கி பளபளப்பை தரும் அழகு குறிப்புகள் !!


பாதாம் எண்ணெய்யில் சிறிது எலுமிச்சை சாறு விட்டு குழைத்து முகத்தில் பூசிவந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

வேப்பிலை, புதினா, மருதாணி, குப்பைமேனி இவற்றை நிழலில் உலர்த்தி தனித்தனியாக பொடியாக்கி அதில் சமஅளவு எடுத்து பாலில் குழைத்து முகத்தில் பூசி 20  நிமிடம் கழித்து முகத்தை இளம் சூடான நீரில் கழுவி வந்தால் முகக்கறுப்பு மாறும்.

பப்பாளி பழச்சாறு எடுத்து அதை காய்ச்சாத பசும் பால் விட்டு அல்லது தயிர் விட்டு குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் காயவைத்து முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள முகச் சுருக்கம், கருமை நீங்கும்.
 
நன்கு பழுத்த வாழைப்பழத்தை பிசைந்து அதனுடன் சிறிதளவு மைதா மாவு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகம் கருமை  மாறி பளபளப்பாக இருக்கும்.
 
புதினா இலைகளின் சாறு எடுத்து முகத்தில் தடவினால் முகப்பரு மாறுவதுடன் முகம் பளபளக்கும். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் சிவப்பு சந்தனக் கட்டையை  நீரில் உரைத்து முகத்தில் பூசி காலையில் கழுவி வர முகப்பரு, பருவினால் ஏற்பட்ட கரும்புள்ளிகள், தழும்புகள் மாறும்.
 
இரவு படுக்கைக்குச் செல்லும்முன் புதினா சாறு எடுத்து அதில் சம அளவு எலுமிச்சம் பழச்சாறு கலந்து அதில் பயற்றம் மாவு சேர்த்து குழைத்து முகத்தில் பூசி பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் கட்டி வைத்து ஒற்றடம் கொடுத்தால் முகம் பளபளக்கும்.


No comments:

Post a Comment