benefits-of-breathing-exercises-to-help-keep-the-body-healthy- உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் மூச்சுப்பயிற்சியின் பயன்கள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 20 August 2021

benefits-of-breathing-exercises-to-help-keep-the-body-healthy- உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் மூச்சுப்பயிற்சியின் பயன்கள் !!

உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் மூச்சுப்பயிற்சியின் பயன்கள் !!


முறையான மூச்சு பயிற்சியினை மேற்கொண்டால் நீண்ட ஆயுளுடன் வாழலாம். குறைவாகவும், மெதுவாகவும் மூச்சுவிடும் ஜீவராசிகள் அனைத்தும் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறது.   

மூச்சு பயிற்சிக்கு  உகந்த நேரம் அதிகாலை அல்லது மாலை வேளைகள் ஆகும். சமமான தரையில் துணி ஒன்றை விரித்து பத்மாசனத்தில் அமர வேண்டும்.
 
புல் தரை, திறந்த வெளி போன்றவை மூச்சு பயிற்சிக்கு ஏற்றதாகும். பயிற்சி செய்பவர்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சமயங்களில் செய்தல் கூடாது.
 
இடது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது இடகலை. வலது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது  பிங்கலை.
 
இடது மூக்குத் துவாரத்தின் வழியாக  மூச்சை உள்ளிழுத்து, வலது மூக்குத் துவாரத்தின் வழியாக  வெளிவிடுவது எளிய மூச்சு பயிற்சி ஆகும். இதில் பல்வேறு  நிலைகள் உள்ளன. 
 
மூச்சு பயிற்சி தொடங்கும் முன்பு குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இப்படியே தொடர்ந்து ஒரு மாத காலம் செய்யும் பொழுது  நாடி சுத்தமடையும்.
 
சாத்விக உணவுகளை பழக்கமாக்க வேண்டும். துரித உணவுகள், அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
 
நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களைத் தூண்டச் செய்து சக்கரங்கள் நன்றாக செயல்பட உதவுகிறது. உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை குணமாக்கும் சக்தி மூச்சுப் பயிற்சிக்கு உண்டு.
 
மூச்சுப் பயிற்சி செய்வதால் சகஸ்ரார சக்கரம் தூண்டப்பட்டு, உடலை சுறுசுறுப்புடன் வைத்திருக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சி செய்வதால் நினைவாற்றல் பெருகும்
 
மூச்சுப் பயிற்சி செய்வதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். தினமும் மூச்சுப் பயிற்சி செய்து வர உடலுக்குள் கிருமிகள் நுழைவதைத் தடுத்து  நிறுத்தும்.
 
தினமும் மூச்சுப் பயிற்சி செய்வதால் உடல் எப்போதும் ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் இருக்கும். பதட்டம் ஏற்படாமல் இருக்க மூச்சுப்பயிற்சி மிகவும்  பயன்படுகிறது.

No comments:

Post a Comment