benefits-of-karupatti-that-can-give-good-digestion- நல்ல செரிமானத்தை கொடுக்கக்கூடிய கருப்பட்டியின் பயன்கள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 13 August 2021

benefits-of-karupatti-that-can-give-good-digestion- நல்ல செரிமானத்தை கொடுக்கக்கூடிய கருப்பட்டியின் பயன்கள் !!

Karupatti

நல்ல செரிமானத்தை கொடுக்கக்கூடிய கருப்பட்டியின் பயன்கள் !!


பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

கருப்பட்டியில் இருக்கும் சுண்ணாம்பு சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் வேறு எதிலுமே இல்லாத அளவிற்கு மகத்துவமானது என்று கூறலாம். குறிப்பாக பெண்களுக்கு கருப்பட்டி சிறந்த ஆரோக்கியத்தை கொடுக்கும்.பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.
 
குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.
 
கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன. கருப் பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள 'கிளைசீமி இன்டெக்ஸ்' உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது.
 
சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது.
 
இயற்கையோடு இணைந்தால் தான் நம்முடைய ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். இயற்கையாக கலப்படமில்லாத கருப்பட்டியில் நம் உடலை சுத்தப்படுத்தி, நல்ல செரிமானத்தை கொடுக்கக்கூடிய தன்மை உள்ளது.
 
மாதவிடாய் காலத்தில் வரக்கூடிய வயிற்று வலி நீங்க கருப்பட்டியை சிறிதளவு சாப்பிட்டால் போதும். உடனே வயிற்று வலி நின்று ரத்தப்போக்கு சீராகிவிடும்.

No comments:

Post a Comment