benefits-of-nannari-which-cures-various-diseases பல்வித நோய்களுக்கு தீர்வு தரும் நன்னாரியின் பயன்கள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 13 August 2021

benefits-of-nannari-which-cures-various-diseases பல்வித நோய்களுக்கு தீர்வு தரும் நன்னாரியின் பயன்கள் !!

Nannari

 பல்வித நோய்களுக்கு தீர்வு தரும் நன்னாரியின் பயன்கள் !!


சித்த மருத்துவத்தில் நன்னாரியின் வேர்கள் பயன்படுத்தப்படுகிறது. சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஷ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது.

நன்னாரி வேர்ப்பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவதோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.நன்னாரி வேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்பலாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர சிறுநீரக நோய்கள் அனைத்தும் விலகும்.
 
நன்னாரி வேர் பொடியுடன் சமளவு கொத்தமல்லியைத் தூள் செய்து சேர்த்து அருந்திவர பித்த சம்பந்த மனகோளாறுகள் நீங்கும். தவிர வயிறு, குடல், இவைகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.
 
நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக்கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.
 
வேர் சூரணம் அரை கிராம் காலை மாலை வெண்ணெய்யில் கொள்ள ஆரம்ப குஷ்டம் தீரும். தேனில் கொள்ள பாண்டு, காமாலை தீரும். அதிகமாகச் சாப்பிட்டால் பசி இருக்காது. சித்தமருத்துவத்தில் நன்னாரி பல தைலங்களிலும் லேகியங்களிலும் மணமூட்டும் பொருளாகச் சேர்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment