benefits-of-taking-curry-leaves-for-people-with-mouth-ulcers- வாய்ப்புண் உள்ளவர்கள் கறிவேப்பிலை எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் பயன்கள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 20 August 2021

benefits-of-taking-curry-leaves-for-people-with-mouth-ulcers- வாய்ப்புண் உள்ளவர்கள் கறிவேப்பிலை எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் பயன்கள் !!

Curry leaves

வாய்ப்புண் உள்ளவர்கள் கறிவேப்பிலை எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் பயன்கள் !!


கறிவேப்பிலையில் இரண்டு வகை உண்டு, அவை நாட்டுக்கறிவேப்பிலை, காட்டுக்கறிவேப்பிலை என்ற இரு வகையாகும். நாட்டுக் கறிவேப்பிலை உணவாகவும்,  காட்டுக்கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகிறது. 

காட்டுக் கறிவேப்பிலையின் இலை சற்றுப் பெரிதாகவும் கசப்பு அதிகம் உள்ளதாகவும் இருக்கும். நாட்டுக் கறிவேப்பிலை இலை அதனைவிடச் சிறிதாகவும்,  இனிப்பும், துவர்ப்பும் நறுமணமும் உள்ளதாக இருக்கும்.
 
பூக்கள் கொத்தாக அமைந்திருக்கும், கறிவேப்பிலைப் பழம் உருண்டை வடிவாக கொண்டது. இந்த பழம் சதைப்பற்றாக இருக்கும். காய் பழுத்து சிவப்பாகி பின்னர் கருப்பு நிறமாக மாறிவிடும். 
 
கறிவேப்பிலையின் இலை, ஈர்க்கு, பட்டை, வேர் முதலியன உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. கருவேப்பிலை சாப்பிட்டால் கண் பார்வைக்கோளாறு  அணுகாது. எலும்புகள் பலப்படும் சோகை நோய் வரப்பயப்படும். புண்கள் விரைவில் ஆற கறிவேப்பிலை உதவுகிறது.
 
வாய்ப்புண் உள்ளவர்கள் கருவேப்பிலை சாப்பிட்டால் வாய்ப்புண் ஆறிவிடும். வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளைப்போக்கும் குணம் கறிவேப்பிலைக்குண்டு. மலச்சிக்கலைப் போக்கும், ஜீரணசக்தியைக்கூட்டும், பேதியைக் கட்டுப்படுத்தும். பித்தத்தைக்கட்டுப்படுத்தி வாந்தியைத் தடுத்து வயிற்றில் ஏற்படும் வயிற்று  இரச்சலைத் தடுக்கும்
 
கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சது, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த  சத்துக்களால் கண் பார்வைக் கோளாறுகள், சோகை நோய்கள் குணமடைகின்றன.

No comments:

Post a Comment