top-causes-and-solutions-for-ulcers அல்சர் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களும் தீர்வுகளும் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 13 August 2021

top-causes-and-solutions-for-ulcers அல்சர் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களும் தீர்வுகளும் !!

அல்சர் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களும் தீர்வுகளும் !!

தலைவலி, ஜுரம் போல வெகு சாதாரணமாக இந்த நோய் காணப்படுவதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கமே. 

பாக்கெட் உணவுகள், ரசாயனம் கலந்துள்ள உணவுகள் என மேற்கத்திய உணவு பழக்கங்களை கடைபிடிப்பதாலேயே இது போன்ற நோய்கள் வருகின்றன. தொண்டை, உணவுக்குழாய், சிறுகுடல், இரைப்பை போன்ற உறுப்புகளில் ஏற்படும் புண்களை அல்சர் என்கிறோம். 

நாம் சரியான நேரத்திற்கு உண்ணவை உண்ணவில்லை என்றாலும், காலை வேலை உணவை தொடர்ந்து தவிர்த்து வந்தாலும், காரம் அதிகம் உள்ள உணவுகள், மாசாலா அதிகம் உள்ள உணவுகள், புளிப்பான உணவுகள் போன்றவற்றை அதிகம் உண்பதாலும் அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது. 
 
மணத்தக்காளிக் கீரையோடு பாசிப் பயிறு, நெய் சேர்த்து சமைத்து தினமும் உண்டு வர அல்சர் குணமடையும். 
 
வெள்ளை குங்கிலியம் 50 கிராம் எடுத்துக்கொண்டு அதை இளநீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். இளநீர் நன்கு சுண்டிய பிறகு வடிகட்டி பொடிசெய்துகொள்ள வேண்டும். அந்த பொடியை தூய பசு வெண்ணெய்யில் இரண்டு கிராம் அளவு கலந்து காலை மாலை என இரு வேலையும் சாப்பிட வேண்டும். அதன் பிறகு ஒரு டம்ளர் பாலை குடித்து வர அல்சர் குணமாகும். 
 
இளநீரில் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து இரவில் நிலவொளியில் விட்டு விடியற்காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்துவர அல்சர் குணமடையும். 
 
அல்சர் குணமடையும் வரை காரம், புளிப்பு, அசைவ உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. அதோடு தினமும் குறைந்தது 3 லிட்டில் தண்ணீர் குடிக்க வேண்டும். அதோடு நேரத்திற்கு தூங்க வேண்டும். இவை அனைத்தையும் கடைபிடித்தால் அல்சர் நோயில் இருந்து விரைவில் விடுபடலாம்.

No comments:

Post a Comment