இரத்த அழுத்தம் கூடினால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன...?
உடலில் உள்ள பல்வேறு திசுக்களுக்குத் தேவையான உணவும், பிராண வாயும் எப்பொழுதும் கிடைக்கவும், அந்த திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேற்றச் செய்வதற்கும் ஒரு அமைப்பு நம் உடலுக்குத் தேவைப்படுகிறது.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவார்களுக்கு ஹார்மோன் அளவு மாறுதல், சிறுநீரகக் பாதிப்புகள், சிறுநீரகத்துக்குக் குறைவான இரத்தம் செல்லுதல், இதய தமணி
சுருங்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.
மனகவலை, பதற்றம், பயம், படபடப்பு, மன இறுக்கம் போன்றவைகளால் இரத்த அழுத்தம் கூடலாம். உணவில் அதிகமாக உப்பு சேர்த்து கொள்வதால் அதிகமான அதிகபடியான உப்பு இரத்தத்தில் கலக்கிறது. இதனால் இரத்தம் அதன் அடர்த்தி நிலையைக் குறைக்க உடலில் உள்ள நீரை அதிகமாக எடுத்துக்கொண்டு சிறுநீரகம் மூலமாக அதை வெளியே தள்ள முயல்கிறது. இதனால் இரத்த அழுத்தம் கூடுகிறது.
வயிறு நிறைய உண்பதைத் தவிர்த்து எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவை சாப்பிட வேண்டும். முதலில்
சாப்பிட்ட உணவு செரிமானம் அடைந்த பிறகு அடுத்தவேளை உணவு அருந்துவது நல்லது. நீண்ட பட்டினி கிடந்தாலும் இரத்த அழுத்தத்திற்கு அதிகமாக காரணமாக அமையும்.
எண்ணெய்யில் பொரித்த உணவுகளை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும். மாமிச வகைகளை அறவே நீக்க வேண்டும். புளிப்புப் பண்டங்கள், மசாலாப் பொருட்கள், காபி, டீ, அதிக உப்பு நிறைந்த உணவுகள், அசைவ உணவுகள், பருப்பு வகைகள், வாயுவைப் பெருக்கும் உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
மன அழுத்தத்தை உண்டாக்கும் கோபம், சதா சிந்தனை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment