causes-and-solutions-for-hair-loss கூந்தல் உதிர்வதற்கான காரணங்களும் தீர்வுகளும் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 22 August 2021

causes-and-solutions-for-hair-loss கூந்தல் உதிர்வதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!

Hair Loss

கூந்தல் உதிர்வதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!


கூந்தல் உதிர பல காரணங்கள் உள்ளன. அந்த காரணங்களை கண்டறிந்து நிவர்த்தி செய்தால் கூந்தல் உதிர்வை தடுக்கலாம். இப்போது கூந்தல் அடர்த்தியாக, கருமையாக வளர சில எளிய இயற்கை முறைகளை பார்க்கலாம்.

* வைட்டமின், 'பி' குறைவினால், விரைவில் தலைமுடி நரைக்க ஆரம்பிக்கும். ஊட்டசத்துமிக்க உணவே, இக்குறைபாட்டை நீக்கும். நெல்லிக்காயையும், ஊறவைத்த  வெந்தயத்தையும் நன்றாக அரைத்து, அந்த விழுதைத் தலையில் பூசி, ஊறவைத்து குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதுடன், கண் எரிச்சலையும் போக்கும்.

 
* தேங்காயை சுடுநீர் சேர்த்து அரைத்து, தலையில் தடவி ஊறவைக்கவும். பிறகு நன்றாக, 'மசாஜ்' செய்தால், மயிர்க்கால்கள் வலுப்பெறும்.
 
* இரண்டு ஸ்பூன் வினிகருடன், கடலைமாவைக் குழைத்து, கால் மணி நேரம் ஊறவைக்கவும். இதை, மயிர் கால்களில் படும்படி பூசி, அரைமணி நேரம் கழித்து  அலசினால், பொடுகு தொல்லை போய் விடும்.
 
* தேங்காயை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, பால் பிழியவும். இதை இரும்பு கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயை, தலையில்  தடவி ஊறியபின், சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.
 
* நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால், மயிர்க்கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு, முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.
 
* சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊறவைத்து தேய்த்துக் குளிக்கலாம்.


No comments:

Post a Comment