causes-and-solutions-for-hair-loss தலைமுடி உதிர்வதற்கான காரணங்களும் தீர்வுகளும் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Monday 30 August 2021

causes-and-solutions-for-hair-loss தலைமுடி உதிர்வதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!

Hair Loss

தலைமுடி உதிர்வதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!


தலைமுடி உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மரபணுக்கள், மாசுக்கள், அதிகப்படியான தலைமுடி பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, ஹேர் கலர் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. எனவே இந்த எண்ணெய் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்பு கொடுத்தால், முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, தலைமுடியும் நன்கு வலிமையடையும்.
 
ஒரு பௌலில் 20-30 மிலி ஆலிவ் ஆயிலுடன், 10 மிலி தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
 
பின் இந்த எண்ணெய் கலவையை வெதுவெதுப்பாக சூடேற்றி, விரலால் ஸ்கால்ப்பில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தலை முழுவதும் இந்த எண்ணெய் கலவையைத் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
 
பின்பு எஞ்சிய எண்ணெய்யை முடியின் முனை வரை நன்கு தடவ வேண்டும். இச்செயலால் முடி வெடிப்பு மற்றும் முடி உடைதல் போன்றவை தடுக்கப்படும்.
 
அடுத்து ஒரு துணியை சுடுநீரில் நனைத்து பிழிந்து, அந்த துணியை தலையில் சுற்றி 20 நிமிடம் கட்டிக் கொள்ள வேண்டும். இந்த செயல் மூலம் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.
 
பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 1-2 முறை என 2 மாதம் தொடர்ந்து பின்பற்றினால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.


No comments:

Post a Comment