coriander-leaves-control-blood-sugar-levels-ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்கும் கொத்தமல்லி !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 27 August 2021

coriander-leaves-control-blood-sugar-levels-ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்கும் கொத்தமல்லி !!

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்கும் கொத்தமல்லி !!

கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது. கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது. 

இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது. இக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் கிடைக்கும். இக்கீரையை எண்ணெயில் சிறிது வதக்கி, கட்டிகள், வீக்கங்களின் மீது வைத்துக் கட்டினால் குணம் கிட்டும். 

கொத்தமல்லிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிடலாம். தினமும் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் எளிதாய் பிரியும். பற்களுக்கு உறுதியை அளிக்கும். பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும். முதுமைப் பருவத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்கி தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தரும்.
 
கொத்தமல்லி இலையில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது. இதன்மூலம், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.
 
கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள், பற்கள் உறுதி அடையும்.
 
கொத்தமல்லி இலையில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகை வருவதற்கான வாய்ப்புக் குறைகிறது. உடலின் ஆற்றலை அதிகரிக்க, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு, உறுப்புக்களின் இயல்பான இயக்கத்துக்கு என்று பெரிதும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
 
எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவையான விட்டமின் E இதில் நிறைவாக உள்ளது. செரிமானத்திற்க்கு உதவும் என்சைம்கள் சுரப்பதைத் தூண்டுவதைப்போல, இன்சுலின் சுரப்பையும் கொத்தமல்லி இலை தூண்டுகிறது. இதன்மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகிறது. எனவே, சர்க்கரை நோயைத் தவிர்க்க விரும்புகிறவர்கள், சர்க்கரை நோயாளிகள் கொத்தமல்லி இலையைத் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment