உடலுக்கு தேவையான அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ள மக்காச்சோளம் !!
மக்காச்சோளத்தில் இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ்,
துத்தநாகம், செம்புச் சத்து போன்ற பல வகையான உடலுக்கு அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்திருக்கின்றன.
பெரும்பாலான முக அழகு சாதனப் பொருட்களில் சோளம் சார்ந்த பொருட்கள் அதிக அளவு உபயோகிக்கப் படுகிறது. சோளத்தில் நார்ச்சத்து அதிகமிருப்பதால் இதை சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் ஈரப்பததன்மை காக்கப்படுவதோடு, சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
சோள மாவை தண்ணீர் அல்லது சிறிது பால் கலந்து நன்றாக முகத்தில் பூசி கொண்டு, சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி வர முகப்பரு தழும்புகள் எண்ணெய் வழிதல் போன்ற குறைபாடுகள் நீங்கி பளபளப்பான முகத்தோற்றத்தை தரும்.
கண்புரை குறைபாடு ஏற்படுவதை பெருமளவு
குறைக்கும் சக்தி மக்காச்சோளத்தில் இருக்கும் பீட்டா கரோட்டின் கொண்டுள்ளது. சோளத்தில் பீட்டா கரோட்டின் எனப்படும் சத்து அதிகமுள்ளது.
சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது. இந்த நார்ச்சத்து மூலநோய் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மக்காச்சோளத்தில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகமிருக்கின்றன. அதிலும் குறிப்பாக தயாமின் மற்றும் நியாசின் ஊட்டச்சத்துக்கள் இந்த சோளத்தில் இருக்கின்றன.
மக்காச்சோளத்தில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் சத்துக்களை குறைத்து ரத்த நாளங்கள் நரம்புகள் மற்றும் இதயத்திற்கு செல்லக்கூடிய நரம்புகள் போன்றவற்றில் கொழுப்புகள் படிந்து விடாமல் தடுத்து சீரான ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்து இதய பாதிப்புகள் ஏற்படாமல் காக்கிறது.
No comments:
Post a Comment