countless-benefits-of-drinking-honey-mixed-with-hot-water- வெந்நீருடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday 10 August 2021

countless-benefits-of-drinking-honey-mixed-with-hot-water- வெந்நீருடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள் !!

Hot water - Honey

வெந்நீருடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள் !!


வெந்நீருடன் தேனைக் கலந்து குடித்தால், எண்ணற்ற நன்மைகள் மற்றும் பலனைப் பெறலாம். ஏனெனில் தேனும் மருத்துவ குணம் நிறைந்த ஓர் மருத்துவப் பொருள் ஆகும். 

தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து குடித்தால் உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படும். அதிலும் அந்நீருடன் சிறிது எலுமிச்சையை சேர்த்துக் கொண்டால், சிறுநீர் பெருக்கத்தினால், எளிமையாக டாக்ஸின்களை வெளியேற்றலாம்.தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்குவதோடு, கழிவுப்பொருட்களை உடலில் இருந்து வெளியேற்ற உதவும். மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தை பாக்டீரியாக்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்து, சுத்தமான மற்றும் பொலிவான சருமத்தைப் பெற உதவும்.
 
தேனில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் சக்தி உள்ளது. அதனால் தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால், நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.
 
தொடர்ச்சியாக வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால், சளி, காய்ச்சலில் இருந்து விலகி இருக்கலாம். மேலும் இது தொண்டையில் இருக்கும் புண் மற்றும் வறட்டு இருமலையும் தடுக்கும்.
 
வாய்வுத் தொல்லையால் அவஸ்தைப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபட இந்த தேன் கலந்த நீர் உதவும். அதற்கு வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment