கூந்தல் நரையை கொஞ்சம் தள்ளிப் போடுங்கள்
சரியான வயது வருவதற்குள் முடி நரைக்க துவங்கி விட்டதா ? இதை கொஞ்ச நாட்களுக்கு தள்ளி போடலாம். நரைமுடி என்ன காரணத்தினால் வந்தது என்பதை முதலில் அறிந்து அதை சரி செய்ய முயற்சிக்க வேண்டும் மரபணுவால் வந்த நரையை தவிர மற்ற அனைத்தையும் ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
நரைமுடி உடல்நல பிரச்சனையாக இருந்தால் மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை பெறுவது அவசியம்.
இதனால் நரைமுடி தீவிரமாகாமல் மற்ற முடிகளுக்கு பரவாமல் தடுக்க முடியும். அதோடு நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் குறித்தும் பார்க்கலாம்.
தைராய்டு அளவை கட்டுப்படுத்துங்கள்
உடலில் தைராய்டு சுரப்பி உடலின் அனைத்து முக்கிய செயல்பாடுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகிறது. தைராய்டு ஹைப்பர் தைராய்டு அல்லது ஹைப்போ தைராய்டிசம் முன்கூட்டிய வெள்ளைமுடி ஏற்படலாம். அளவை கண்காணிக்க வேண்டியது அவசியம். இது உங்கள் தலைமுடியில் நிறமி இழப்பை ஏற்படுத்த காரணம் தைராய்டா என்பதை அறிந்து சிகிச்சை செய்ய வேண்டும்.
ஹைப்போ தைராய்டிசம் நாள்பட்ட தீவிரமான நிலை. ஹார்மோன் கூடுதலாக தேவைப்படலாம். தைராய்டு சுரப்பியில்
சில உணவுகளும் இடையூறு உண்டாக்கலாம். சரியான முறையில் சிகிச்சை செய்தால் முடி நரை பிரச்சனை நீங்கும்.
புற ஊதாக்திர்களிலிருந்து முடியை பாதுகாக்கவும்
ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் வெளிப்புற காரணிகளில் புற ஊதாக்கதிர்களும் ஒன்று. இது முடியை முன்கூட்டியே நரைக்க செய்கிறது. அதனால் வெயிலில் வெளியே செல்லும் பொது தலைமுடி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.
அதற்கு தோதாக கூந்தலை
முழுமையாக கவர் செய்யும் வகையில் துணியை, தாவணியை கூந்தலில் சுற்றி பிறகு மயிர்க்கால்களில் பாதுகாப்பு செய்து வெளியில் செல்லுங்கள். அதிக வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்ப்பதே நல்லது.
No comments:
Post a Comment