do-you-know-the-nutrients-in-karunjeeragam கருஞ்சீரகத்தில் உள்ள சத்துக்கள் எதற்கு பயன்படுகிறது தெரியுமா....? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 22 August 2021

do-you-know-the-nutrients-in-karunjeeragam கருஞ்சீரகத்தில் உள்ள சத்துக்கள் எதற்கு பயன்படுகிறது தெரியுமா....?

கருஞ்சீரகத்தில் உள்ள சத்துக்கள் எதற்கு பயன்படுகிறது தெரியுமா....?


கருஞ்சீரகத்தை வினிகரில் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும். கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு  நல்லது.

* உடலுக்கு தேவையான கல்சியம் மற்றும் இரும்பு சத்துக்களை இந்த கருஞ்சீரகம் கொண்டிருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாகும்.

* மலசிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் கருஞ்சீரகம் பயன்படுத்தி வந்தால் விரைவில் குணமடையலாம். வயிற்றில் உண்டாகும் சமிபாட்டு கோளாறுகளையும் சரி செய்யும் தன்மை கொண்டது.
 
* கருஞ்சீரகம் வயிற்றுள் உள்ள வாயுத்தொல்லையை நீக்கும் தன்மை கொண்டது. மற்றும் இரைப்பை, ஈரலில் ஏற்படும் கிருமி தொற்றுக்களையும் போக்கும் தன்மை  கொண்டது.
 
* அடிக்கடி கருஞ்சீரகம் உணவில் சேர்க்கப்பட்டு வரும்போது இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது மற்றும் நுரையீரலில் உள்ள கழிவுகளை நீக்கவும் உதவுகிறது.
 
* வயிற்றில் அல்சர் உள்ளவர்கள் கருஞ்சீரக பொடியை தண்ணீரில் கலந்து தினமும் குடித்து வந்தால் புண்கள் ஆறி விடும். குடல் புழுக்கள் உள்ளவர்கள் கருஞ்சீரக  பொடியை வெண்ணீரில் கலந்து தினமும் குடித்து வந்தால் குடல் புழுக்கள் நீங்கி விடும்.
 
* கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும். கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீர் பை கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும்.
 
* கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி நல்எண்ணெய்யில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.


No comments:

Post a Comment