do-you-know-what-cinnamon-is-used-for-மருத்துவகுணங்கள் நிறைந்த இலவங்க பட்டை எதற்காக பயன்படுகிறது தெரியுமா....? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 20 August 2021

do-you-know-what-cinnamon-is-used-for-மருத்துவகுணங்கள் நிறைந்த இலவங்க பட்டை எதற்காக பயன்படுகிறது தெரியுமா....?

மருத்துவகுணங்கள் நிறைந்த இலவங்க பட்டை எதற்காக பயன்படுகிறது தெரியுமா....?


டைப் 2 வகை நீரிழிவுநோயை சமாளிப்பதில் இலவங்கப்பட்டை உதவுகிறது என்று சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இன்சுலின் அளவை குறைக்கும் பண்பு  இலவங்க பட்டையில் இயல்பாகவே இருக்கின்றது.

அன்றாட உணவில் சேர்க்கும் கறி மசாலையில் இலவங்கப்ட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில்  புண்கள் ஏற்படாமல் காக்கும்.
 
பட்டையிலுள்ள கால்சியம் நமது இதயத்தை நன்கு சீராக வைக்க உதவுகிறது. நரம்புத் தளர்ச்சியைக் கட்டுப் படுத்துகிறது. குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு  பட்டையை கஷாயம் செய்து கொடுத்து வந்தால் கருப்பை வெகு விரைவில் சுருங்கி சாதாரண நிலைக்கு வரும். அதிக உதிரப்போக்குள்ள பெண்களுக்கும் இது  சிறந்த மருந்து.
 
மூட்டு நோய் உள்ளவர்கள் காலை, மாலை இருவேளைகளிலும் ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனும் ஒரு சிறிய ஸ்பூன் இலவங்கப் பட்டைப்  பொடியும் கலந்து சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட மூட்டு நோய் குணமாகும்.
 
பட்டை பூஞ்சை காளான், பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணி நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது. தலைப் பேனை விரட்டவும் பட்டை உதவுகிறது. பூச்சிக்  கடிக்கு பட்டையை அரைத்துப் பூசலாம்.
 
இலவங்க பட்டை நுரையீரலில் இருந்து சளியை அகற்றுவதால், நுரையீரலில் ஏற்பட்டிருக்கும் இறுக்கம்/அடைப்பை சரிசெய்ய உதவுகிறது. மற்ற சிகிச்சைகளுடன்  சேர்த்து இலவங்கப்பட்டையையும் பயன்படுத்தும் போது, ​​அது ஒரு பருவகால இருமல், ஜலதோஷம் முதல் பெரிய பிரச்சனைகள் வரை பலவற்றில் உதவுகிறது.

No comments:

Post a Comment