do-you-know-what-to-do-to-keep-the-bile-from-increasing பித்தம் அதிகரிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா...? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 22 August 2021

do-you-know-what-to-do-to-keep-the-bile-from-increasing பித்தம் அதிகரிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா...?

பித்தம் அதிகரிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா...?

உடலுக்கு தேவையான தண்ணீரை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உடலில்நீர் சத்து குறைந்து பித்தம் அதிகமாகும். தினமும் போதியளவு தண்ணீர் எடுத்துக்கொள்வது அவசியம்.

அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை உண்ணும் போது உடலில் பித்தம் அதிகமாகும். காரணம் கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமானம் அடைய தாமதமாகும் இதனால் உடலில் அதிகளவு பித்தம் சுரக்கப்படும். அதிக எண்ணெய் தன்மையுள்ள உணவுகள் உண்பதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

மது மற்றும் புகைப்பிடித்தல் பழக்கம் அதிகமாக இருந்தால் இது உடல் உஷ்ணத்தை தூண்டி பித்தத்திற்கு வழிவகுக்கும். மது மற்றும் புகைப்பிடித்தல் பழக்கத்தை கைவிடுவது பித்தம் குணமாக மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் மிக சிறந்தது.
 
அதிக புளிப்பு தன்மை உள்ள உணவுகள், அதிக நொறுக்கு தீனிகள், காரத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்பதாலும் உடலில் பித்தம் அதிகமாக சுரக்கும். எனவே இந்த உணவுகளை குறைத்துக்கொள்வது சிறந்தது.
 
மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் பித்தம் அதிகரிக்கும். எனவே உணவில் அதிகம் நார்ச்சத்துக்கள் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வது நல்லது.
 
இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி தேனில் இரண்டு நாட்கள் ஊறவைத்து பின் காலையில் எடுத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.


No comments:

Post a Comment