does-anyone-know-if-there-is-a-joint-pain-problem யாருக்கெல்லாம் மூட்டு வலி பிரச்சனை இருக்கும் தெரியுமா...? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 29 August 2021

does-anyone-know-if-there-is-a-joint-pain-problem யாருக்கெல்லாம் மூட்டு வலி பிரச்சனை இருக்கும் தெரியுமா...?

யாருக்கெல்லாம் மூட்டு வலி பிரச்சனை இருக்கும் தெரியுமா...?

நமது உடலில் எலும்புகள் இணையும் இடம்தான் மூட்டு. இதில் தோள்பட்டை, கை மூட்டு, கை மணிக்கட்டு, கால் மூட்டு, இடுப்பு மூட்டு, கால் பாதம் ஆகிய ஆறு மூட்டுகள் முக்கியமானவையாகும்.

மூட்டுவலி வயதானவர்களுக்கு மட்டுமே வரும் எனப் பலரும் நினைத்துக்கொள்கிறோம். வயதாகும்போது, உடல்சார்ந்த உபாதைகளின் சதவிகிதம் அதிகரிப்பதால்,  மூட்டுவலியின் தீவிரமும் அதிகரிக்கிறது. ஆக, வயதாகும்போது மூட்டுவலியின் தீவிரம் அதிகரிக்குமே தவிர, அது வயதான காலத்தில் ஏற்படும் நோயல்ல. 
 
உடல் பருமன், மரபு, உடலுழைப்புக் குறைவு, மெனோபாஸ் காலகட்டத்தைத் தாண்டிய பெண்களின் உடல்நிலையில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், காசநோய்,  சர்க்கரைநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு மூட்டுவலி இருக்கும். 
 
சரியான சிகிச்சை எடுக்காதபட்சத்தில் காலப்போக்கில் அதன் பாதிப்பு அதிகரிக்கக்கூடும். முழங்கால் மூட்டு, இடுப்பு, முதுகுத்தண்டுவடம், கழுத்து, தோள்பட்டை,  கை மணிக்கட்டு ஆகிய இடங்களில் வலி ஏற்படலாம். இவற்றில் பொதுவாக அதிகமானோரைப் பாதிப்பது இடுப்புவலி, கழுத்துவலி, முழங்கால் மூட்டு மற்றும்  தோள்பட்டை வலி. 
 
நீண்டநாள் பாதிப்பு வகைகளில் ஒன்றான மூட்டு வலியில், வலி உணர்வு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதிகரிக்கும். எனவே, முதல்நிலையிலேயே பிரச்னையைக்  கண்டறிந்து, அதற்கேற்ப வாழ்வியலில் மாற்றங்களைச் செய்வது, சிகிச்சை போன்றவற்றால் வருங்காலத்தில் பாதிப்பின் தீவிரம் குறைக்கலாம்.

No comments:

Post a Comment