does-green-tea-control-diabetes (கிரீன் டீக்கு நீரிழிவை கட்டுப்படுத்தும் தன்மை உண்டா...?) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Monday, 16 August 2021

does-green-tea-control-diabetes (கிரீன் டீக்கு நீரிழிவை கட்டுப்படுத்தும் தன்மை உண்டா...?)

herbal teas

கிரீன் டீக்கு நீரிழிவை கட்டுப்படுத்தும் தன்மை உண்டா...?

கிரீன் டீயில் பல வகைகள் உள்ளது. அவைகளில் பலசுவை மணங்களும் பல வீதத்தில் காப்பைனும் அடங்கியுள்ளது. எந்த கிரீன் டீ அதிக சுவையுடன் இருக்கும் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொருத்ததாகும். 

இருப்பினும் மூலிகைகள் மற்றும் இஞ்சி, ஏலக்காய், கருப்பு மிளகு மற்றும் இலவங்கப் பட்டை போன்ற மசாலாக்கள் சேர்க்கப்பட்ட கீரீன் டீக்களை தேர்ந்தெடுத்தால் அதிக உடல் நல பயன்கள் கிடைக்கும்.கிரீன் டீ ‘ஆன்டிஆக்சிடென்ட்’ ஆகச் செயல்படுகிறது. உடலில் உள்ள பிரீ ரேடிகல்ஸ் ஆக்சிடைஸ் அடைந்து செல்களை பாதிக்காமல் தடுக்கிறது. பிரீ ரேடிகல்ஸ் ஆக்சிடைஸ் அடைந்து செல்களை பாதித்தால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையாமல் இருந்தால்தான் வளர்சிதை மாற்றம் முறையாக நடந்து உடலில் உள்ள  நச்சுப்பொருட்களை வெளியேற்றும்.
 
இதனால் உடலில் உள்ள செல்கள் பாதிப்படையாமல் தடுக்கவும் கிரீன் டீ உதவுகிறது. கொழுப்புகளை கரைத்து பருமன் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மையும் கிரீன்  டீக்கு உண்டு. 
 
கிரீன் டீயில் அமினோ அமிலங்கள் உள்ளன.  இது உடல் மற்றும் மனச் சோர்வைப் போக்கக்கூடியது. எனவே, மன அழுத்தம் உள்ள சமயங்களில் கிரீன் டீ  அருந்தலாம்.
 
கிரீன் டீக்கு நீரிழிவைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களும், நீரிழிவு வருவதற்கு முந்திய நிலையில் உள்ளவர்களுக்கும் கிரீன் டீ அருந்தி பயன் பெறலாம்.
 
கிரீன் டீயில் சிறிய துண்டு எலுமிச்சைச்சாறு பிழிந்து குடிக்கலாம். நச்சுக்களை வெளியேற்றும் தன்மையை அதிகப்படுத்தும். அதிக பட்சம் 2 அல்லது 3 கப்  மட்டடுமே குடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment