facial-methods-to-help-soften-the-skin சருமத்தை மென்மையாக்க உதவும் ஃபேஷியல் முறைகள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 22 August 2021

facial-methods-to-help-soften-the-skin சருமத்தை மென்மையாக்க உதவும் ஃபேஷியல் முறைகள் !!

Facial

சருமத்தை மென்மையாக்க உதவும் ஃபேஷியல் முறைகள் !!

ஆலிவ் ஆயில் சருமத்தை மென்மையாக்க உதவுவதோடு, சருமத்தை புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவும்.


தினமும் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

பெரும்பாலான பெண்களுக்கு ஸ்ட்ராபெர்ரி மிகவும் விருப்பமான பழமாக இருக்கும். அத்தகைய ஸ்ட்ராபெர்ரியைக் கொண்டு முகத்திற்கு மாஸ்க் போட்டால், அது முகத்தில் உள்ள சுருக்கங்களையும், முதுமைக் கோடுகளையும் தடுக்கும்.
 
அவகேடோவை தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால் முகம் பட்டுப் போன்று வறட்சியின்றி அழகாக இருக்கும்.
 
கடுகு கூட சரும அழகைப் பராமரிக்க உதவும். ஆனால் கடுகை பயன்படுத்தும் முன் அதனை கையில் தடவி சோதனை செய்து பின் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் சிலருக்கு கடுகு அரிப்பை ஏற்படுத்தும். கடுகு மாஸ்க் செய்யும் போது, கடுகை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஊறவைத்து கழுவ  வேண்டும்.
 
சரும அழகைப் பராமரிப்பதில் மயோனைஸ் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதிலும் வறட்சியான சருமம் உள்ளவர்கள், மயோனைஸ் உடன் முட்டையை சேர்த்து நன்கு கலந்து, மாஸ்க் போட்டால் நல்ல பலனைக் காணலாம்.
 
மஞ்சள் தூளில் பால் சேர்த்து கலந்து அன்றாடம் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் தங்கியுள்ள பாக்டீரியாக்கள் அழிந்து, முகம் பளிச்சென்று பொலிவோடு இருக்கும்.

No comments:

Post a Comment