அடிப்படை உடல்நலம் தொடர்பான ஆலோசனைகள்
கைனகாலஜிஸ்ட் டாக்டர் பிரியா செல்வராஜ், சில அடிப்படை உடல்நலம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். டயட்டைத் தவிர்க்கும் நாட்களை சமாளிக்கவும். தனக்கு பிடித்த பிரேக் ஃபாஸ்ட்டைப் பற்றியும் சொல்கிறார்.
30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்னென்ன....
பொதுவான ஹெல்த் செக்-அப்பை விரைவில் செய்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். ஹார்மோன் ரீதியாக, இனப்பெருக்க மற்றும் மெட்டாபாலிக் ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும்.
இரண்டையும் கண்காணிக்க வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்-அப் செய்து கொள்வதால், பெரிய நோய்கள் வராமல் காத்துக் கொள்ளலாம். செர்விக்ஸ் கேன்சர் ஒரு காலத்தில் இந்திய பெண்களிடையே ஒரு அச்சுறுத்தலாக இருந்தது. மார்பகப் புற்றுநோயும் அச்சுறுத்தல்தான். பாலுறவில் ஈடுபடும் பெண்கள், தங்கள் வயதைப் பொருட்படுத்தாமல் ஆண்டுக்கு ஒருமுறை பாப் ஸ்மியர் (இனப்பெருக்க உறுப்பு திரவங்களின்சோதனை) சோதனையை செய்து கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனையுடன் வைட்டமின்கள் எடுத்துக்கொள்வது அவசியம். இந்தியாவில் வைட்டமின் டி குறைபாடு அதிகரித்து வருகிறது, அதேபோல பெண்களிடையே ஆஸ்டியோபோரோசிஸ் நோயும் அதிகரித்து வருகிறது. கூடிய விரைவில், கால்சியம் மற்றும் ஃபோலிக் அமில
துணைப்பொருட்களை எடுத்துக் கொள்ளத் தொடங்குவது நல்லது.
வாரத்திற்கு ஒருமுறை டயட்டை பின்பற்றாமல் இருப்பது உடலை பாதிக்குமா?
டயட்டில் இருப்பவர்கள் தங்கள் உணவை முறையாக ரசித்து சாப்பிடுவது அவசியம். உங்களுடைய தினசரி உணவை ரசித்து சாப்பிட தொடங்கி விட்டால், அதை ஒருநாள் கைவிட வேண்டும் என்ற ஆசை எல்லாம் ஏற்படாது. அப்படி செய்ய ஆசைப்படாதீர்கள். தினசரி உணவை ரசித்து சாப்பிடுங்கள், தரமான உணவுகளை சாப்பிடுங்கள். எப்போதாவது ஒருமுறை ஒரு பீட்சா, பர்கர் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அதற்காக ஏங்குவது பிரச்சனையானது.
சிசெரியன் அல்லது இயல்பான பிரசவம். எதைப் பற்றி மனதில் சிந்திக்க வேண்டும்?
ஒருவர் கர்ப்பமாக இருக்கும்போது, எதற்கும் தயாராக இருப்பது நல்லது. உங்கள் மருத்துவர் என்ன சொல்கிறாரோ அதைப் பின்பற்றுங்கள். இயல்பாக இருந்து உங்கள் வழக்கமான பணிகளை செய்து வாருங்கள். கர்ப்பமாக இருப்பது கொஞ்சம் சிரமமான நிலைமைதான். உங்கள் உடலில் உள்ள அனைத்தும், ஒரு குழந்தையைக் கையாள்வதற்காக தயாராகி கொண்டிருக்கும்.
உடலின் அதிகபட்ச மெட்டாபாலிக் நிலையாகும். இதனால் அனீமியா, ஹைப்பர்டென்ஷன் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படக் கூடும். ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமானவள். ஆரோக்கியமாக இருப்பது மட்டுமே இயல்பான பிரசவத்திற்கு வழி வகுக்காது. இதைப் பற்றி, கடுமையான ஒற்றை மனநிலையில் இருப்பது நல்லதல்ல. மருத்துவர்களாகிய நாங்கள் எப்போதுமே இயல்பான பிரசவத்திற்கே முன்னுரிமை அளிப்போம், ஏனெனில் அதுதான் இயற்கையின் வழி.
மன அழுத்தத்தை முற்றிலும் போக்குவதற்கு ஏதேனும் வழிகள் இருக்கிறதா?
இதைப் பற்றி தினமும் ஆராய்ச்சி செய்யும் ஆள் நான். நம்முடைய உடலின் ஒட்டுமொத்த நிலைமையும் மனதையே சார்ந்தது. உங்கள் தினசரி வாழ்க்கையில் போட்டி அழுத்தத்தை அதிகரித்து, நம்மை இன்னும் சிறப்பாக செயல்பட உதவுகிறது. அதை சிறப்பாக நிர்வகிப்பதை நோக்கிதான் நாம் நகர வேண்டும். அழுத்தம் எல்லா இடங்களிலும் இருக்கிறது. தினசரி ஒருமணிநேரம் உடற்பயிற்சி செய்வது, உங்கள் மனநிலையை அழுத்தத்தை எப்படி கையாள்வது என்று சிந்திக்க உதவும்.
யோகாவும் இதற்கு நல்ல மருந்தாகும்.
ஆரோக்கியமான காலை உணவு என்று எதை சொல்வீர்கள்?
எனக்கு தென்னிந்திய உணவுகள்தான் பிடிக்கும். இட்லி சாம்பார், சட்னிதான் எனக்குப் பிடித்த பிரேக்ஃபாஸ்ட்.
No comments:
Post a Comment