health-tips-and-facts உங்கள் உடல்நலம் உங்கள் கையில் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 31 August 2021

health-tips-and-facts உங்கள் உடல்நலம் உங்கள் கையில்

femina

உங்கள் உடல்நலம் உங்கள் கையில்

உங்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள்
காலை வேளையில் 15 நிமிடம் சூரிய வெளிச்சம் படவேண்டும் என்று ஃபெமினா ஆரோக்கிய வல்லுனர்கள் வலியுறுத்து கின்றனர். இது வைட்டமின் டி உதவும். இந்த வைட்டமின் குறைபாடு தசை, எலும்புகளில் பலவீனத்தை உண்டாக்கி, இதய நோய் உள்ளிட்ட அபாயத்தை உண்டாக்கும்.

தினசரி கலோரியில் பாதியை காலையில் உட்கொள்வது கருவுறும் தன்மையை அதிகரிப்பதாக கிளினிக்கல் சயன்ஸ் மருத்துவ சஞ்சிகையில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது. இதனால்தான் திடமான காலை உணவை பரிந் துரைக்கின்றனர். பால், பழங்களுடன் சேர்த்து சாப்பிடுவது சிறந்த காலை உணவு.

ஸ்டிரெச்சிங், படிகளில் ஏறி இறங்குவது, அலுவலகத்தில் வேலைக்கு நடுவே நடப்பது ஆகியவை, நீண்ட நேரம் அலுவலக நாற்காலிகளில் அமர்ந்திருப்பதால் பாதிக்கப்படும் தசைகள், மூட்டுகளுக்கு நல்ல பயிற்சி.

அசத்தல் ஐ-க்யூ:

நீண்ட காலம் தாய்ப்பாலூட்டுவதற்கும் வளர்ந்த பின் புத்திசாலியாக இருப்பதற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக சமீபத்தில் தி லான்சட் குளோபல் ஹெல்த் ஜர்னலில் வெளியான ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. தாய்ப் பால் புகட்டலின் நீண்ட கால பலனை ஆராய்வதற்காக பிரேசிலில் ஆய்வாளர்கள் 6,000 குழந்தைகளை அவர்கள் பிறந்தது முதல் 30 ஆண்டுகளுக்கு கவனித்து வந்தனர். அவர்களில் 30 வயதான 3,500 பேர் சமீபத்தில் நேர்முகத்தேர்வு, ஐ&க்யூ தேர்வில் பங்கேற்றனர். இதன் முடிவுகள் தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர்கள், அது இல்லாமல் வளர்ந்தவர்களைவிட புத்திசாலித்தனம் மிக்கவர்களாகவும் அதிகம் சம்பாதிப்பவர்களாகவும் இருப்பது தெரிய வந்தது. “நீண்ட காலம் தாய்ப்பால் கொடுக்கப்பட்டவர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகரிக்கிறது என்பதற்கான ஆதாரத்தை வழங்கும் முதல் ஆய்வு இது’’ என்று கூறியிருக்கிறார் பிரேசிலின் ஃபெடரல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் ஃபெர்மார்டோ லெசா ஹோர்டா.

தாயின் எடை:

கருவுறுவதற்கு முன் பருமனாக அல்லது மோசமான வாழ்வியல் பழக்கம் கொண்ட பெண்கள் அதிக எடை கொண்ட குழந்தையைப் பிரசவிப்பதற்கான வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகம் இருப்பதாக பிரிட்டன் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. புகைப்பது, உடல் பருமன், வாழ்வியல் பழக்கம் காரணமாக ஏற்படும் வைட்டமின் டி குறைபாடு குழந்தை மீது தாக்கம் செலுத்தலாம் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர். பிரிட்டனின் சவுதாம்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் சியான் ராபின்சன் நடத்திய இந்த ஆய்வு, இத்தகைய குழந்தைகளின் 6வது வயதில் 47 சதவீத கூடுதல் கொழுப்பு எடை கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment