how-to-cope-with-stress மன அழுத்ததை சமாளிக்க - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 31 August 2021

how-to-cope-with-stress மன அழுத்ததை சமாளிக்க

Femina

மன அழுத்ததை சமாளிக்க

பணிச் சூழல் காரணமாக கவலையும் மன அழுத்தமும் அதிகமானால் வேலையை ராஜினாமா செய்ய வேண்டாம். இந்த மூன்று எளிய வழிகளை பின்பற்றலாம் என்கிறார் ரீமா பெஹல்.

 டவர்ஸ் வாட்சன் நடத்திய ஆய்வில், இந்தியாவில் பங்கேற்றவர்களில் பாதி பேருக்கு மேல் வேலை செய்யுமிடத்தில் மிதமிஞ்சிய அழுத்தத்தை உணர்வதாக கூறியுள்ளனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்களிடம் இருந்து வரும் செயல்திறனுக்கான மிகையான நெருக்கடியை காரணம் காட்டியிருந்தனர். மன அழுத்தமே இல்லாத சூழல் சாத்தியமில்லை. எனினும் இந்த நடவடிக்கைகள் பணி சூழலுக்கு ஏற்ப தயாராக்கும்.

 நெருக்கடி சூழல்: பிரஷர் குக்கர் சூழ்நிலைகள் நாமே உருவாக்குவதுதான் என்று கூறுகிறார் எண்டோகிர்னாலிஜிஸ்ட்டான டாக்டர் ஷாகுன் மகாஜன். “ஒரு குறிப்பிட்ட வேலையை சூழலை வாழ்வா, சாவா அல்லது இப்போது இல்லை எனில் எப்போதும் இல்லை எனும் சூழலாக கருதுவதன் மூலம், உங்கள் மீதான அழுத்தத்தை அதிகமாக்கிக் கொள்கிறீர்கள். மாறாக இது அருமையான தருணம், எதிர்காலத்தில் இதைவிட சிறந்த தருணங்கள் வாய்க்கும், எனவே என்னால் முடிந்த சிறந்ததைக் கொடுப்பேன் என தனக்குத்தானே சொல்லிக்கொள்ளுங்கள்.” இது அமைதியையும் கவனத்தையும் தரும்.முதலில் செல்ஃபீ எடுங்கள்: வார இறுதி மீட்டிங் அல்லது வாடிக்கையாளர் சந்திப்பு என எதுவாக இருந்தாலும் சகாக்கள் முன் பேச வேண்டி இருப்பது பதற்றமாக உணர வைக்கலாம். நம்பினால் நம்புங்கள், இது போன்ற நிகழ்வுகளுக்கு முன் நீங்கள் தயாராவது போல செல்ஃபீ அல்லது வீடியோ எடுப்பது பதற்றத்தை கட்டுப்படுத்தும். அடிக்கடி உங்களை கேமரா முன் பார்ப்பது, உலகத்தை மறக்க உதவுவது மூலம் டென்ஷனைக் குறைப்பதாக சிக்காகோ பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.

 உடல் மொழி: பணியிடத்தில் அமரும் விதம், நிற்கும் விதம் நீங்கள் விஷயங்களை கையாளும் விதத்தில் தாக்கம் செலுத்தும். கைகளை குறுக்கே கட்டிக் கொண்டிருக்காமல், திறந்து வைத்திருந்தபடி, தோள்களை குறுக்காமல் நேராக வைத்திருக்கும் போது உடலும் மூளையும் நம்பிக்கை அளிக்கும்  டெஸ்டோஸ்டிரோனை கூடுதலாக உற்பத்தி செய்து, பதற்றத்தை தரும் கார்டிசாலை குறைவாக சுரக்கச் செய்கிறது’’ என்கிறார் டாக்டர் மகாஜன்.

No comments:

Post a Comment