keep-the-body-healthy-by-dissolving-unwanted-fat-தேவையற்ற கொழுப்பை கரைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் கொள்ளு !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 27 August 2021

keep-the-body-healthy-by-dissolving-unwanted-fat-தேவையற்ற கொழுப்பை கரைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் கொள்ளு !!

Kollu

தேவையற்ற கொழுப்பை கரைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் கொள்ளு !!


கொள்ளு தானியங்களில் அதிக அளவில் இரும்புச்சத்து இருக்கின்றன. இது பெண்களின் மாதவிடாய் காலத்தில் அதீத ரத்தப்போக்கு ஏற்படுவதால் உடல் இழந்த சத்துக்களை ஈடு செய்கிறது. மாதவிடாய் ஏற்படும் போத ு உண்டாகும் அதிக எரிச்சல் மற்றும் வலியையும் குறைக்கிறது.

உடல் எடையை குறைப்பதற்கான உணவாக கொள்ளு தானியம் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. கொள்ளை நன்றாக பொடி செய்து, அதை தினமும் காலையில் நீரில் கலந்து குடித்து வருபவர்களுக்கு வெகு சீக்கிரத்தில் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. ஏதேனும் ஒரு உணவு வேளையில் மற்ற உணவுகளைத் தவிர்த்து முளைகட்டிய கொள்ளு சாப்பிட்டு வருவதால் உடல் எடை விரைவில் குறையும்இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் புரதம் அதிகம். உண்மையில், பருப்பு வகைகளில் மிக அதிகமான கால்சியம் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளதாகவும், சைவ உணவுகளில் புரதச்சத்து மிகுந்த ஒன்றாகவும் கொள்ளு உள்ளது.
 
சிறிதளவு கொள்ளு தானியங்களை ஒரு கிண்ணத்தில் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் அக்கிண்ணத்தில் இருக்கும் நீரோடு கொள்ளு தானியங்களை வேகவைத்து, அந்த நீரை சேமித்து ஒரு நாளைக்கு மூன்று முறை குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் லூகோரியா பிரச்சனை விரைவில் தீருகிறது.
 
கொள்ளு தானியங்களை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இயற்கையாகவே சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லாமலேயே போகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். கொள்ளு தானியங்களில் இரும்புச்சத்து மற்றும் பாலிபினால் வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. இவை இரண்டும் சிறுநீரக கற்களை கரைக்க பெருமளவு உதவி புரிகிறது.
 
கொள்ளு தானியங்களில் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. தினமும் காலையில் சிறிதளவு முளைக்கட்டிய கொள்ளு தானியங்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு எப்படிப்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையும் விரைவில் தீரும்.


No comments:

Post a Comment