let-s-learn-about-the-main-medicinal-properties-of-seetha-fruit சீத்தாபழத்தின் முக்கிய மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 22 August 2021

let-s-learn-about-the-main-medicinal-properties-of-seetha-fruit சீத்தாபழத்தின் முக்கிய மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

Seetha fruit

சீத்தாபழத்தின் முக்கிய மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!


சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை என அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்  இதயம் பலப்படும்.

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது  உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் அடங்கிய சீதாபழத்தின் முக்கியமான மருத்துவ  குணங்கள் பற்றி இங்கு காண்போம்.

குழந்தைகளுக்கு சீத்தாப்பழம் கொடுத்து வர எலும்பு உறுதியாகும், பல்லும் உறுதியாகும். சீத்தாப்பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது.
 
சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல்  அதிகரிக்கும்.
 
சீத்தாப்பழ விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.
 
சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து, இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து, ஊறிய பின்னர் குளித்து வர தலை குளிர்ச்சி பெறும், முடியும் உதிராது, பொடுகு காணாமல் போகும்.
 
சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது. சீதாப்பழ  மரத்தின் இலைகள் மருத்துவகுணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. 


No comments:

Post a Comment