பற்களில் ஏற்படும் வலிக்கு சில நிவாரணங்கள் பற்றி பார்ப்போம் !!
பற்களின் உள் அமைப்பும், ஈறுகளின் சேர்க்கையும் பற்றிய விபரங்கள் யாவரும் அறிந்து கொள்ள வேண்டியவை. பாதிக்கப்பட்ட பற்களை சரியாகத் துலக்காமல்
இருப்பது அவற்றை சிதைவடையச் செய்யும்.
பற்களின் சில பகுதிகள் வெளிக்கொணரப்படுவதால் அவை அத்தகைய வலிக்கு ஆளாக்கப்படுகின்றன. ரசாயன மற்றும் குளிர் தட்பவெப்ப நிலைகளிலும் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.
கால் டீ.ஸ்பூன் கல்லுப்பினை ஒரு டம்ளர் இளஞ்சூடான தண்ணீரில் கரைத்து கொள்ள வேண்டும்.காலை,மாலை மற்றும் இரவு என மூன்று நேரம் வாயை கொப்பளிக்க வேண்டும்.இதனுடன் மஞ்சள் தூளும் சுரத்து கொள்ளலாம்.பல் வலி படி படியாக குறையும்.
இரண்டு சிறிய கிராம்புகளை எடுத்துக்கொண்டு அதை பல் வலி இருக்கும் இடத்தில் வைத்து சிறிது நேரம் நன்றாக கடித்து கொண்டிருந்தால் பல் வலி குணமாகும்.கிராம்பு
எண்ணெய்யும் பல் வலி உள்ள இடத்தில தடவலாம்.
கைப்பிடி அளவு புதினா இலைகளை இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க விட வேண்டும்.தண்ணீர் ஆறியதும் சிறிது சிறிதாக குடிக்கலாம்.அந்த தண்ணீரை வைத்து வாயை நன்றாக கொப்பளிக்கலாம்.
வேப்பமர பட்டை வேப்ப மரப்பட்டையோடு ஆறு கிராம்பு சேர்த்து நீரில் போட்டு நன்றாக சாறு இறங்கும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.அந்த நீரை கொண்டு வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும்.
No comments:
Post a Comment