lots-of-benefits-in-easily-available-betel எளிதில் கிடைக்கும் வெற்றிலையில் உள்ள ஏராளமான நன்மைகள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday, 26 August 2021

lots-of-benefits-in-easily-available-betel எளிதில் கிடைக்கும் வெற்றிலையில் உள்ள ஏராளமான நன்மைகள் !!

betel

எளிதில் கிடைக்கும் வெற்றிலையில் உள்ள ஏராளமான நன்மைகள் !!



வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச் சாற்றுடன் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகிவர சிறுநீர் நன்கு  பிரியும்.

* வெற்றிலையை கடுகு எண்ணெய்யில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.
 
* குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில், கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.
 
* வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.
 
* குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.
 
* வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.
 
* கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்றுவலி  குணமாகும்.

No comments:

Post a Comment