medicinal-properties-of-brandy பிரண்டையின் மருத்துவ குணங்கள்... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 29 August 2021

medicinal-properties-of-brandy பிரண்டையின் மருத்துவ குணங்கள்...


Pirantai 1




பிரண்டையன் மருத்துவ குணங்கள்...


தமிழகம் முழுவதும் தானே விளைந்து பயன்படுத்துவோரின்றி வீணே போவது பிரண்டை. சதைப்பற்றான நாற்கோண வடிவ தண்டுகளுடைய ஏறு கொடி. பற்றுக்கம்பிகளும், மடலான இலைகளும் கொண்டிருக்கும்.
சாறு உடலில் நமைச்சல் ஏற்படுத்தும், சிவப்பு நிற உருண்டையான சதைக்கனிகளை உடையது. வேர், தண்டு ஆகியவை மருத்துவகுணம் உடையவை, இதன் இன்னொரு பெயர் வச்சிரவல்லி.

1. இதன் தண்டுகளில் நார் நீக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் செரியாமை நீக்கும்.

2. பிரண்டை சாற்றில் புளி, உப்பு, கலந்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப்போட சதை பிழற்சி, அடிபட்ட வீக்கம், எலும்பு முறிவு,வீக்கம் தீரும்.
3. கடைகளில் கிடைக்கும் பிரண்டை உப்பு 2 அரிசி எடைஅளவு 3 வேளை பாலில் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி, சீதபேதி, நுரைத்த பச்சை பேதி தீரும்.

4. பிரண்டை உப்பினை 2அ3 அரிசி எடையளவு வெண்ணெய்யில் கலந்து சாப்பிட்டு வர வாய்ப்புண், வாய்நாற்றம், உதடு, நாக்கு வெடிப்பு தீரும்.

5. பிரண்டை உப்பினை 1 குண்டுமனி வீதம் வெண்ணெய்யுடன் சாப்பிட்டு வர சிறுகுடல், பெருங்குடல், இரைப்பை புண்கள், தீராத நாட்பட்ட வயிற்றுவலி, மூலம், மூல அரிப்பு, மலத்துடன் சீழ், இரத்தம் வருதல் தீரும்.
6. சாதிக்காய் சூரணத்துடன் பிரண்டை உப்பினை சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி,பலவீனம், தாது இழப்பு ஆகியவை தீரும்.

7. பிரண்டை வேரை உலர்த்தி பொடித்து 1 கிராம் அளவு காலை,மாலை கொடுத்துவர முறிந்த எலும்புகள் ஒன்று கூடும்.

இவ்வளவு குணநலங்கள் கொண்ட பிரண்டையின் பயன்பாடு மிகவும் குறைந்து போய் விட்டது.

No comments:

Post a Comment