medicinal-properties-of-poppy-seeds கசகசா விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள்....!! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 29 August 2021

medicinal-properties-of-poppy-seeds கசகசா விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள்....!!

கசகசா விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள்....!!


கசகசா விதைகளில் அதிக அளவு காப்பர் மற்றும் கால்சியம் சத்துக்கள் அடங்கியுள்ளன; இது முதலில் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எலும்புகள் மற்றும் இணைப்பு திசுக்களை பலப்படுத்த உதவுகிறது.

மூளைக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான கால்சியம், இரும்பு, காப்பர் போன்ற தாதுச்சத்துக்கள் கசகசா விதைகளில் அதிகளவு அடங்கியுள்ளன. 
 
இரண்டு தேக்கரண்டி அளவு கசகசாவை எடுத்து, கால் டம்ளர் பாலில் ஊறவைத்து உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் சீதபேதி கட்டுப்படும்.
 
கசகசா மற்றும் பூனைகாலி விதை இரண்டையும் சம அளவு எடுத்து, அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இதில் 5 கிராம் அளவு எடுத்து, பாலிம் கலந்து இரவு நேரங்களில் உண்டுவர நரம்புதளர்ச்சி நீங்கும். உடல் வலிமை பெறும்.
 
வயிற்று போக்கு ஏற்படும் நேரத்தில் சிறிதளவு கசகசாவை வாயிலிட்டு மென்று சிறிதளவு நீர் குடித்து வர வயிற்றுபோக்கு நிற்கும்.
 
கசகசா, முந்திரி பருப்பு, பாதம் பருப்பு இவற்றை வகைக்கு 100 கிராம் அளவு எடுத்து பொடியாக்கி காலை, மாலை என இருவேளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து உண்டுவர உடல் வலிமை பெறும்.
 
தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் இரவு நேரங்களில் கசகசாவை பாலில் அரைத்து உண்டால் தூக்கம் நன்றாக வரும்.
 
கசகசாவை துவையலாக அரைத்து உண்டு வந்தால் உடல் வலிமை பெறும். நீரிழிவு நோய் கட்டுப்படும். தூக்கம் நன்றாக வரும். நரம்புகள் வலுவாகும். விந்து கட்டும். உடல் வலிமை பெறும். ஆண்மை பெருகும். உடல் பொலிவு பெறும். நரம்புகள் பலம் பெறும்.


No comments:

Post a Comment