இயற்கை மருத்துவத்தில் மஞ்சணத்தியின் மருத்துவ பயன்கள் !!
நுணா மரத்தின் உள்புறம் மஞ்சள் நிறமாக இருக்கும். அதனால்தான் இதை 'மஞ்சணத்தி' என்று சொல்கிறார்கள்.
இதில் செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புகள் இயற்கையாகவே இருக்கின்றன. இந்த மரத்தின் பழத்தைச் சாப்பிடலாம். ஆனால் நாக்கு கறுத்து விடும்.
மஞ்சணத்தி, வெப்பம் தணிக்கும்; வீக்கம் கரைக்கும்; மாந்தம் போக்கும்;
கல்லீரல் - மண்ணீரல் கோளாறுகளைத் தீர்க்கும்; பசியைத் தூண்டும்; தோல் நோய் போக்கும்.
நுணா இலைச்சாறு ஒரு பங்கும், உந்தாமணி, நொச்சி, பொடுதலை ஆகிய மூன்றின் சாறும் ஒருபங்கு கலந்து 3, 4 வேளை கொடுத்து வரச் சகல மாந்தமும் தீரும்.
பூதகரப்பான் பட்டை, பூவரசம் பட்டை,
இசைப்பைக் கட்டி இவற்றை சமனெடையாகச் சுட்டுக் கரியாக்கி நல்லெண்ணையில் குழைத்துக் கரப்பான் மேற்றடவ நீங்கும்.
நுணாப் பட்டையக் கொதி நீரில் போட்டு ஊறவைத்தால் சாயம் இறங்கிவிடும். வெண்மையான துணிகளுக்குக்கு காவி நிறம் ஊட்டலாம். இந்த காவி ஆடை உள் நோயைத் தீர்க்கும்.
நுணா காயும், இலையும் மாதவிடாய்க் கோளாறுகளைக் குணப்படுத்தக்கூடியவை. மஞ்சணத்தி இலையை பசையாக அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து, அதே அளவு அதன் காயையும் அரைத்துச் சேர்த்து சிறிது மிளகுத்தூள், கால் ஸ்பூன் சீரகம் சேர்த்து
ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவேண்டும். அதில் 50 முதல் 100 மி.லி வரை எடுத்து 48 நாள்கள் தொடர்ந்து குடித்து வந்தால் மாதவிடாய் கோளாறுகள் நீங்கிவிடும்.
நுணா இலையை மையாக அரைத்துப் புண், ரணம், சிரங்குகளில் வைத்துக் கட்டினால் குணமாகும். இலையை இடித்துப் பிழிந்து சாறு எடுத்து இடுப்புவலி உள்ள இடங்களில் பூசினால் பலன் கிடைக்கும். காயை அரைத்துச் சாறு எடுத்து தொண்டையில் பூசி வந்தால் தொண்டை நோய்கள் நீங்கும்.
No comments:
Post a Comment