orange-fruit-is-rich-in-vitamin-c-nutrients- அதிக அளவில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ள ஆரஞ்சு பழம் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Monday, 16 August 2021

orange-fruit-is-rich-in-vitamin-c-nutrients- அதிக அளவில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ள ஆரஞ்சு பழம் !!

Orange Fruit

அதிக அளவில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ள ஆரஞ்சு பழம் !!



ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும். இது புற்றுநோயைத் தடுக்கக்கூடிய மிக முக்கிய காரணியாகும்.


ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய மிக முக்கிய பொருள் ஆரஞ்சில் உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஃபைபர் கொழுப்பைக் குறைக்கவும், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. ஆரஞ்சில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இவை உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குகின்றன. இதன் விளைவாக சருமம் என்றும் இளமையாகவே இருக்கிறது. 
 
ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இது பொதுவான சளி மற்றும் காது நோய்த்தொற்றுகளின் அபாயத்தை குறைக்கிறது.
 
மாதவிலக்குக் காலங்களில் அதிக உதிரப் போக்கால் சிலர் சோர்ந்து காணப்படுவார்கள். இதனால் அதிக மன உளைச்சல், எரிச்சல் கொள்வார்கள். இவர்கள் ஆரஞ்சு பழச் சாற்றில் காய்ச்சிய பால் அல்லது தேன் கலந்து அருந்தி வந்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம்.
 
ஆரஞ்சு தினமும் உண்பதால் முகத்தில் அழகு கூடும், அதிக தாகத்தைத் தணிக்கும், வாய் நாற்றத்தைப் போக்கும், உடல் வறட்சியை நீக்கும், உடல் சூட்டைத் தணிக்கும், தலைச் சுற்றல் நீங்கும்.
 
எலுமிச்சை வகையை சேர்ந்த ஆரஞ்சு பழத்தில், வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியது. இதயத்துக்கு பயன் தரவல்லது. கொழுப்பு சத்தை கரைக்கும் தன்மை கொண்டது. கண் பிரச்னைகளை சரிசெய்கிறது. புற்றுநோயை தடுக்க கூடியதாக அமைகிறது.

No comments:

Post a Comment