papaya-has-the-ability-to-increase-immunity நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்ட பப்பாளி!! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 10 August 2021

papaya-has-the-ability-to-increase-immunity நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்ட பப்பாளி!!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்ட பப்பாளி!!


பப்பாளியை தினமும் நம் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியமாக வாழலாம்.

பப்பாளி பழத்தில் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளது. ரத்தில் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரித்து, நோய் தொற்று ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது.பப்பாளி பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தை குறைத்து, இரத்த அழுத்தம் ஏற்படாமல் இதயத்தை பாதுகாக்க பப்பாளியில் உள்ள  பொட்டாசியம் உதவுகிறது.
 
பப்பாளிபழம்  சர்க்கரை, நீரிழிவு பிரச்சனையை குணமாக்குவதில் சிறப்பாக செயல் படக்கூடியது. இது ரத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, அவர்களின் உடல் சோர்வை குறைகிறது.
 
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் இயற்கையானது. இதனால் உண்டாகும் வழிகள்,உடல் சோர்வு தவிர்க்க முடியாதது. மற்றும் ஒரு சில பெண்களுக்கு ரத்த போக்கு அதிகமாகவும், குறைவாகவும் இருக்கும் நிலையில் பப்பாளி இந்த பிரச்னையை குணப்படுத்துகிறது
 
பப்பாளியை நாம் எந்தக் காலத்திலும் எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இது ஒரு திகட்டாத பழம் என்பதால், நாம் அளவுக்கதிகமாக சாப்பிட்டு விடுவோம். அப்பொழுதுதான் பிரச்னை. அளவோடு சாப்பிடும் வரை இது அபூர்வமான பழம்.
 
முகெலும்பு பிதுக்கம் அல்ல நழுவல் காரணமாக வரும் கடுமயான வலிக்கு பப்பாளியில் உள்ள 'கமோ பாப்பன்' என்ற கெமிக்கல் நல்ல குணமளிப்பதாக அமெரிக்காவில் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.
 
பொவாகவே பப்பாளி தலைமுடி, சருமம், கண்பார்வை, தொண்டை, வயிறு, சிறுநீரகம் அனைத்துக்கும் மிகவும் ஏற்றது. எக்காரணத்தைக் கொண்டும் பப்பாளியை நாம் தவிர்த்தால், நம் ஆரோக்கியத்தை நாம் தவிர்க்கிறோம் என்றுதான் அர்த்தம்.

No comments:

Post a Comment