சுண்ணாம்புச்சத்து நிறைந்து காணப்படும் பசலைக்கீரை !!
பசலை கீரையின் இலைகள் சிறிது சிறிதாக எதிர் அடுக்கில் இருக்கும். இதன் தண்டைக் கிள்ளி வைத்தால் வளரும். பசலை கீரையில் கொடிபசலை மற்றும் சிறுபசலை என இருவகை உண்டு.
கொடி பசலை
கொம்புகள், மரங்கள், செடிகள் இவற்றை பற்றியபடி வளரும் தன்மை கொண்டது, சிறுபசலை தரையோடு தரையாக வளரும் தன்மை கொண்டது.
கீரைகள் எல்லாமே சத்துகள் நிறைந்தவையே. அந்த வகையில் சாதாரணமாக வீட்டுத் தோட்டங்களில் வளரக்கூடிய பசலைக்கீரையில் சுண்ணாம்புச்சத்து, புரதச்சத்து போன்றவை உள்ளன. ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்கள் பசலைக் கீரையை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால்,
டானிக் எதுவும் தேவையில்லை.
பசலைக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும். பசலைக்கீரையுடன் பாசிப் பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் உடல் உஷ்ணம், மலச்சிக்கல் நீங்கும்.
ஆனால் மருத்துவ குணங்கள் என்று பார்த்தால் இரண்டுக்கும் ஒன்றுதான். குளிர்ச்சியான இடத்திலும், காய்ந்த இடத்திலும் கூட இந்த பசலைக் கீரை வளரும். இதன் இலை எள்ளின் உருவத்தில் வெந்தயம் அளவு பருமனாக இருக்கும். இலையும், கொடியும் சிவந்த மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும்.
பசுவெண்ணெய்யுடன் பசலைக்கீரை சேர்த்து அரைத்து தடவினால், அக்கி சரியாகும். பசலைக்கீரையுடன் பூண்டு சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டால், ஆண்மைக்குறைபாடு நீங்கும்.
No comments:
Post a Comment