pearl-millet-to-protect-against-bone-problems- எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும் கம்பு !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 10 August 2021

pearl-millet-to-protect-against-bone-problems- எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும் கம்பு !!

Kambu

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும் கம்பு !!

கம்பில் பைட்டோ கெமிக்கல் உள்ளது. கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கக்கூடிய, பைடிக் அமிலம் உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் உறுதிப்படுத்துகிறது. இதன்மூலம் கெட்ட கொழுப்பை கரைக்க முடியும்.

கம்புவில் நார்சத்து உள்ளதால் அவர்கள் கம்ப ு பயிறு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசிஎடுக்காமல் இருக்கும், இதனால் அவர்களின் உடல் எடை குறையும்.ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கும் கம்பு சாப்பிடலாம். முக்கிய சத்தான வைட்டமின் A வை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பு பயிரில் உள்ளது.
 
கம்புவில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. ஒருவர் தினமும் கம்மங்கூழை குடித்து வந்தால், இதில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியை அதிகரித்து, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது. குறிப்பாக ஆர்த்ரிடிஸ் மற்றும் எலும்பு முறிவு உள்ளவர்கள் கம்மங்கூழைக் குடிப்பது மிகவும் நல்லது.
 
நீரிழிவு நோயாளிகள் அரிசிக்கு பதிலாக தினமும் கம்பு கூழ், களி, தோசை போன்றவற்றை செய்து சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
 
கம்பு உணவை வழக்கமாக உட்கொள்ளும் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தில் வரக்கூடிய மார்பகப்புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் உருவாகாமல் பாதுகாக்கிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment