ragi-is-rich-in-iron- இரும்புச்சத்து அதிகம் நிறைந்து காணப்படும் கேழ்வரகு !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 29 August 2021

ragi-is-rich-in-iron- இரும்புச்சத்து அதிகம் நிறைந்து காணப்படும் கேழ்வரகு !!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்து காணப்படும் கேழ்வரகு !!


கேழ்வரகை உணவில் சேர்த்து வந்தால், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் நோய்களையும் தடுக்க உதவும். 

குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாக தேவையான கால்சியம் சத்துக்கள் கேழ்வரகில் இருக்கிறது. கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் உள்ளன
 
கேழ்வரகில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளதால். இதனை அதிகம் உண்பதால், ரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது. கேழ்வரகு கஞ்சியை உணவில் சேர்த்து வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும்.
 
கேழ்வரகு மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது. கேழ்வரகு உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் செரிமான உறுப்புகளின் தன்மை  அதிகரிக்கும்.
 
கேழ்வரகு மாவில் செய்யப்பட்ட கேழ்வரகு கஞ்சி, கேழ்வரகு தோசை போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும்.
 
உடல் எடை குறைக்க கேழ்வரகு உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். கேழ்வரகில் லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

No comments:

Post a Comment