remedies-for-foot-cracks- பித்த வெடிப்புக்கான தீர்வுகள்! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 31 August 2021

remedies-for-foot-cracks- பித்த வெடிப்புக்கான தீர்வுகள்!

Femina

femina

பித்த வெடிப்புக்கான தீர்வுகள்!

பெண்கள் தங்கள் முகத்தைப் பராமரிக்கச் செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள்கூட தங்கள் பாதங்களை கவனிக்கச் செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்சனை பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும் இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக்கொள்பவர்கள் ஏராளம். சில டிப்ஸ்

* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் பித்த வெடிப்பு முற்றிலும் குணமாகும்.

* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் பித்த வெடிப்பு முற்றிலும் நீங்கும்.

* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.

No comments:

Post a Comment