rock-salt-that-solves-problems-like-constipation மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 22 August 2021

rock-salt-that-solves-problems-like-constipation மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!

Rock salt

மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!


மற்ற உறுப்புகளை விட இந்து உப்பு நம் கண்களுக்கு மிகவும் நல்லது. நம் இதயத்திற்கும் நல்லது. நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தாது. ஆயுர்வேதத்தில் பல மூலிகை மருந்து தயார் செய்வதில் இந்த இந்து உப்பு சேர்க்கப்பட்டு வருகிறது.

ஆயுர்வேதத்தில் ஹிங்குவசாதி என்னும் சூரண மருந்தில் இந்து உப்பானது சேர்க்கப்படுகிறது. இந்த மருந்தினால் இதய நோய்கள், மூட்டு வலி, இடுப்பு வலி,  நீங்குகிறது. பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி, ஆசனவாய் வலி போன்றவற்றையும் இது நீக்குகிறது. 
 
நெஞ்சு பிடிப்பு, சோகை, மூலம், விக்கல், மூச்சிரைப்பு, இருமல் இவற்றைக் குணப்படுத்தும் தன்மையும் இந்து உப்பிற்கு உள்ளது. 2. கந்தர்வஹஸ்தாதி எனும்  கசாயத்தில் இந்து உப்பும், வெல்லமும் ஒரு சிட்டிகை சேர்த்து குடிப்பதால் நாக்கில் ருசி இல்லாமல் போகும் தன்மையும், குடல் வாய்வு, மலச்சிக்கல் போன்ற  பிரச்சனைகள் தீர்க்கப்படுகிறது. 
 
சிரிவில்வாதி எனும் கஷாயம் வெளி மூலம் மற்றும் உள் மூல பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கசாயமும் இந்து உப்பு சேர்த்து வழங்கப்படுகிறது. மூலத்தினால் ஏற்படும் வலி மலச்சிக்கல் போன்றவை இந்த மருந்தால் படுத்தப்படுகிறது. 
 
வைஷ்வானரம் என்னும் சூரணத்தையும் இந்துஉப்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சூரணத்தை ஒரு ஸ்பூன் அளவு சிறிது வெந்நீருடன் கலந்து காலை மற்றும் இரவு நேரங்களில் உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் குடித்து வந்தால் குடல் சார்ந்த பிரச்சனைகள் சரியாகிவிடும். 
 
இந்து உப்பினால் நம் கண்களுக்கு அதிக பலன் இருப்பதால் பல ஆயுர்வேத கண் சொட்டு மருந்துகளில் இந்து உப்பு சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இப்படி  எல்லா வகையிலும் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். இந்த இந்து உப்பானது நம் தினசரி உணவு பயன்பாட்டிற்கு மிகவும் சிறந்தது.

No comments:

Post a Comment