saffron-mask-to-help-enhance-skin-tone சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் குங்குமப்பூ மாஸ்க் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 13 August 2021

saffron-mask-to-help-enhance-skin-tone சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் குங்குமப்பூ மாஸ்க் !!

Saffron mask

சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் குங்குமப்பூ மாஸ்க் !!


குங்குமப்பூவை, வெதுவெதுப்பான பாலில் போட்டு, 20 நிமிடம் ஊறவைத்து, பின் அதில் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமமானது  வெள்ளையாகும்.
 


மஞ்சள் ஒரு சிறந்த அழகுப் பொருள். இது முகத்தை அழகாக வைக்க உதவுவதோடு, சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும். எனவே அத்தகைய மஞ்சளுடன் குங்குமப்பூவை சேர்த்து, தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்திற்கு தடவி 10 நிமிடம் ஊறவைத்து, வெதுவெதுப்பான கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள்  நீங்கி, முகம் பொலிவாகும்.
 
குங்குமப்பூவை உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உணவு சுவையுடன், இருப்பதோடு சருமத்திற்கு நல்ல பலனும் கிடைக்கும்.
 
குங்குமப்பூவில் உள்ள நன்மை கிடைக்க வேண்டுமெனில், அதற்கு ஈரப்பசையானது தேவை. எனவே தினமும் குளிக்கும் போது, வெதுவெதுப்பான நீரில் சிறிது  குங்குமப்பூவை தூவி 20 நிமிடம் ஊறவைத்து, பின்னர் குளித்தால், முகம் மட்டுமின்றி, உடல் முழுவதுமே நல்ல நிறத்தைப் பெறலாம்.
 
குங்குமப்பூவ ை சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து, அந்த கலவையைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள்  நீங்கி, சருமம் வெள்ளையாகும்.
 
ரோஸ் வாட்டரில் குங்குமப்பூவை ஊறவைத்து, அந்த கலவையைக் கொண்டு சருமத்தில் தேய்த்து, சிறிது நேரம் ஊறவைத்து கழுவினாலும், சருமத்தின் நிறம்  அதிகரிக்கும்.
 
குங்குமப்பூவானது உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். இதனால் முகத்தில் பருக்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இதனை குளிர்ச்சி மிகுந்த சந்தனப் பொடியுடன் கலந்து பேஸ்ட் போல் செய்து, சருமத்திற்கு மாஸ்க் போட்டால், சருமம் மென்மையாகவும், நிறம் அதிகரித்தும் காணப்படும்.

No comments:

Post a Comment