sesame-oil-that-relaxes-the-nerves-and-keeps-the-body-refreshed நரம்புகளை ரிலாக்ஸ் ஆக்கி உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கும் நல்லெண்ணெய் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 22 August 2021

sesame-oil-that-relaxes-the-nerves-and-keeps-the-body-refreshed நரம்புகளை ரிலாக்ஸ் ஆக்கி உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கும் நல்லெண்ணெய் !!

நரம்புகளை ரிலாக்ஸ் ஆக்கி உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கும் நல்லெண்ணெய் !!


நல்லெண்ணெய் குளியலின் மூலம் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் இருக்கும்.


நல்லெண்ணெய் கொண்டு வாரம் ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறும்.
 
உடலுக்கும் நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும். நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, உடல்  புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
 
பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் சரும வறட்சி. இந்த சரும வறட்சியைத் தடுக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதில் ஒன்று நல்லெண்ணெய். இந்த நல்லெண்ணெயை டோனர் வடிவில் பயன்படுத்தி வந்தால், சருமத்தின் இளமைத்தன்மை தக்க வைக்கப்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடன்  காணப்படும். 
 
அதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை முகம், கை, கால்களில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இப்படி தினமும் பயன்படுத்தி வருவதால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.
 
பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால், பொடுகுத் தொல்லை நீங்கும். தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.
 
நல்லெண்ணெய்யில் மனித உடலால் தயாரிக்க முடியாத லினோலெனிக் அமிலம் மிக அதிக அளவில் இருக்கிறது. இயற்கையிலேயே வைட்டமின் E இருக்கிறது.  நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் நோய்களின் தாக்கம் குறைவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.

No comments:

Post a Comment