sesame-to-increase-heart-health இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் எள்...!! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 20 August 2021

sesame-to-increase-heart-health இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் எள்...!!

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் எள்...!!



எள்ளின் மூலம் பெறப்படும் நல்லெண்ணெய் அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணம்  கொண்டுள்ளது. 

எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண்டும் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது. கருப்பு எள்ளில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. 
 
எள் விதைகளில் எண்ணெய் எடுக்கப்படுகின்றது. ஆனால் பொதுவாக இதை எள் எண்ணெய் என்று சொல்லாமல் நல்லெண்ணெய் என்றே அழைப்பர்.
 
எள் விதை எண்ணெய் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் சீசேமோலின், அழற்சி எதிர்ப்பு பண்புகளான பெருந்தமனி  குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
 
வெள்ளை நிற எள்ளை விட கருப்பு நிற எள்ளில் அதிக இரும்புச் சத்து உள்ளதால் ரத்த சோகையை தடுத்து இரும்புச் சத்துக்களை உடலுக்கு அதிக அளவில்  தருகின்றது.
 
எள்ளில் புரதச் சத்து அதிகம் உள்ளது. உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் உடலில் சக்தி  அதிகரிக்கும். 
 
உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெறுவார்கள். உடல் விரைவில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் பெறுவார்கள்.




No comments:

Post a Comment