should-the-dark-ring-under-the-eyes-disappear கண்களில் கீழ் உள்ள கருவளையம் மறைய வேண்டுமா...? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 27 August 2021

should-the-dark-ring-under-the-eyes-disappear கண்களில் கீழ் உள்ள கருவளையம் மறைய வேண்டுமா...?

Rose water

கண்களில் கீழ் உள்ள கருவளையம் மறைய வேண்டுமா...?

ரோஜா நீரில் காணப்படும் ஆன்டி- பாக்டீரியல் மற்றும் அதன் நன்மைகள் பல நிறைந்துள்ளது. இது  தூசு, மாசு, கண் சிவத்தல், கண் அழற்சி, மேக் அப் மற்றும் அழகு சாதன பொருட்களினால் ஏற்படும் தீங்கில் இருந்து கண்களை பாதுகாக்கிறது.

சிறிதளவு பஞ்சு எடுத்து அதில் ரோஸ் வாட்டரை நன்றாக நனைத்து அதனை கண்களில் மேல் 15 நிமிடம் வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கண்களுக்கு ஏற்படும் சோர்வு நீங்கும்.
 
கணினி மற்றும் தொலைக்காட்சி முன்னால் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் சோர்வை போக்கும் வல்லமை பெற்றது ரோஸ் வாட்டர். இதற்கு சிறிதளவு தண்ணீரில் சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து அதில் பஞ்சை நன்றாக நனைத்து கண்களை துடைக்கவும்.
 
ஓய்வாக படுத்துக்கொண்டு கண்களில் 2 முதல் 3 துளிகள் ரோஸ் வாட்டரை கண்ணில் விட்டு 10 நிமிடம் கண்களை திறக்காமல் அப்படிய ே படுத்திருக்கவும். இப்படி செய்வதால் கண்களில் கூடுதல் அழுக்குகள் சேராமல் தடுப்பதோடு கண்களுக்கு தேவையான ஓய்வினையும் தருகிறது.
 
ரோஸ் வாட்டரில் பஞ்சினை நன்றாக நனைத்து அதனை கண்களில் மேல் போட்டு 10 நிமிடம் கழித்து எடுத்து விடவும். இவ்வாறு 3 முதல் 4 வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால் கண்களில் கீழ் உள்ள கருவளையம் படிப்படியாக மறையும்.
 
அதிகப்படியான பணிகளுக்கு பிறகு கண்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. ரோஜா இதழ்களின் மணம் ஒரு இனிமையான விளைவை கொண்டுள்ளது. இது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் என்று ஆய்வு கண்டறியப்பட்டுள்ளது.
 
பரபரப்பான பணிகளுக்கு இடையில் ரோஸ் வாட்டரில் சுத்தமான காட்டனை நனைத்து கண்களின் மீது வைத்து சில நிமிடங்கள் கண்களை முடியபடி இருந்தாலே கண்களுக்கு வேண்டிய ரிலாக்ஸ் கிடைத்துவிடும்.

No comments:

Post a Comment