snake-gourd-full-of-nutrients-found-in-high அதிக சத்துக்களை நிறைந்து காணப்படும் புடலங்காய் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 20 August 2021

snake-gourd-full-of-nutrients-found-in-high அதிக சத்துக்களை நிறைந்து காணப்படும் புடலங்காய் !!

Snake Gourd

அதிக சத்துக்களை நிறைந்து காணப்படும் புடலங்காய் !!


ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த காய்கறி வகைகளில் புடலங்காயும் ஒன்று. புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி பார்ப்போம்.

புடலங்காயில் நபிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி அடைந்த புடலங்காயை சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. நமக்கு ஏற்படும் அஜீரண கோளாறுகளை நீக்கி,  நாம் சாப்பிடும் உணவுகளை எளிதில் ஜீரணமாக்குவதுடன், நல்ல பசியையும் தூண்டச் செய்கிறது.
 
புடலங்காயை தினமும் நாம் உணவில் சேர்த்து வந்தால், குடல் புண், வயிற்று புண், தொண்டை புண் போன்ற பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடச் செய்கிறது.
 
புடலங்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், மலசிக்கல் பிரச்சனைகள் வராது. மூல நோய் உள்ளவர்கள், தினமும் புடலங்காயை உணவில் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
 
பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை குணப்படுத்தி, கருப்பைக் கோளாறுகள் தொடர்பான பிரச்சனைகளியும் சரி செய்கிறது. 
 
புடலங்காயில் நீர்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், நமது உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை, வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றி, வாத, பித்த, கபங்களால்  ஏற்படும் நோய்களை தடுக்கிறது. 
 
புடலங்காயில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்து போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது.

No comments:

Post a Comment