so-many-benefits-of-drinking-water-in-a-copper-potசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிப்பதால் இத்தனை நன்மைகளா...? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday 18 August 2021

so-many-benefits-of-drinking-water-in-a-copper-potசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிப்பதால் இத்தனை நன்மைகளா...?

copper pot water

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிப்பதால் இத்தனை நன்மைகளா...?



செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால் இருமல், இரைப்பு நோய் வராது. 

மற்ற உலோகஙகளுக்கு இல்லாத சிறப்பு செப்புக்கு மட்டும் கொடுக்கபட்டிருப்பது ஏன் என்றால், செப்பு தன்னை சுற்றி இருக்கும் பிரபஞ்ச ஆற்றல் அனைத்தையும் தனக்குள் ஈர்க்கவும் வல்லது வெளியிடவும் வல்லது. இதனால் தான் நமது முன்னோர்கள் சமைக்க, அருந்த, பூஜிக்க என்று அனைத்து தேவைகளுக்கும் செப்பு பாத்திரங்களை பயன்படுத்தினார்கள்.செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அதில் பல மருத்தவ குணஙகள் அடங்கி இருக்கிறது. அதே பாத்திரத்தை பூஜைக்கும் பயன்படுத்தும் பொது கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் இறை சக்தியை தன்பால் ஈர்த்து நமக்கு தரவல்லது. எனவே பூஜை என்று வரும் போது செப்பு பாத்திரங்களை பயன்படுத்துவது மட்டுமே சிறந்தது. 
 
தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.
 
தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது. நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.
 
கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம். தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது.
 
அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும். தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.

No comments:

Post a Comment