so-many-benefits-of-eating-panang-kizhangu பனங்கிழங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா...? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Monday 16 August 2021

so-many-benefits-of-eating-panang-kizhangu பனங்கிழங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா...?

பனங்கிழங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா...?


நார்ச்சத்து அதிகம் உள்ள பனங்கிழங்கை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனைகள் குணமாகும். உடல் இளைத்தவர்கள் பனங்கிழங்கு சாப்பிட்டு வந்தால் உடல் பருமனாகும். 

பனங்கிழங்கை மஞ்சளுடன் சேர்த்து வேகவைத்து, வெயிலில் காயவைத்து, பின் அதை, அரைத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான இரும்புச்சத்து அதிகமாகும்.

உடலுக்கு குளிர்ச்சித் தன்மை மற்றும் உடலின் வலிமை அதிகரிக்கிறது. பனங்கிழங்குடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை மற்றும் உடல் உள் உறுப்புகள் வலிமையாகும்.
 
சர்க்கரை நோய், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்சனை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
 
ம‌லக்கழிவை வெளியேற்ற‍ இயலாமல் அதாவது மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள், வெயிலில் காயவைத்த‍ பனங்கிழங்கை (ப‌ச்சையாக) எடுத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து ஈரமாவாக அரைத்து தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கியுள்ள‍ அல்ல‍து உடலிலிருந்து வெளியேரமறுக்கும் மலத்தை இளகவைத்து, எளிதான மலத்தை வெளியேற்றி அதாவது மலச்சிக்கலை தீர்த்து பூரண சுகத்தை அளிக்கும். மேலும் உடலுக்கு எதிப்புச் சக்தியாகவும் செயல்பட்டு உடலைக் காக்கும்.

No comments:

Post a Comment